தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் ஆட்சியமைத்த வருடத்தை தவறாக குறிப்பிட்ட மம்தா பானர்ஜி - எதிர்க்கட்சிகள் கிண்டல் + "||" + Mamata Banerjee, who was wrongly mentioned in the state of West Bengal - Opposition Party's Tease

மேற்கு வங்காளத்தில் ஆட்சியமைத்த வருடத்தை தவறாக குறிப்பிட்ட மம்தா பானர்ஜி - எதிர்க்கட்சிகள் கிண்டல்

மேற்கு வங்காளத்தில் ஆட்சியமைத்த வருடத்தை தவறாக குறிப்பிட்ட மம்தா பானர்ஜி - எதிர்க்கட்சிகள் கிண்டல்
மேற்கு வங்காளத்தில் ஆட்சியமைத்த வருடத்தை தவறாக குறிப்பிட்டது தொடர்பாக மம்தா பானர்ஜியை எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்து வருகின்றன.
கொல்கத்தா,

மேற்கு வங்காள அரசு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற யாத்திரை கொண்டாட்டங்களை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும் போது, தான் ஆட்சிக்கு வந்த 2011-ம் வருடத்தை 1911 என தவறுதலாக குறிப்பிட்டார்.


இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நாடு சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் இருந்து ‘1911’ வரை மேற்கு வங்காளம் எந்த வளர்ச்சியும் அடையாமல் இருந்தது. மாநிலம் தற்போது பெற்றிருக்கும் வளர்ச்சி, வளம் அனைத்தும் 1911-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு அடைந்ததுதான். எங்கள் கட்சியின் 7½ ஆண்டு ஆட்சியில்தான் மேற்கு வங்காளம் அதிக வளர்ச்சி பெற்றது’ என்று தெரிவித்தார்.

மேற்கு வங்காளத்தில் 34 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இடதுசாரிகளை வீழ்த்திய மம்தா பானர்ஜி, கடந்த 2011-ல்தான் முதல் முறையாக ஆட்சியை பிடித்தார். ஆனால் அவர் தவறுதலாக 1911-ம் ஆண்டு என குறிப்பிட்டது விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது. மாநிலத்தின் எதிர்க்கட்சிகளான பா.ஜனதாவும், இடதுசாரிகளும் இது தொடர்பாக மம்தா பானர்ஜியை கிண்டல் செய்து உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதா வேட்பாளர் பாரதி கோஷ் காரிலிருந்து பணம் பறிமுதல்
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா வேட்பாளர் பாரதி கோஷ் காரிலிருந்து போலீசார் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
2. மேற்கு வங்காளத்தில் 2-வது நாளாக வன்முறை நீடிப்பு
மேற்கு வங்காளத்தில் 2-வது நாளாக வன்முறை நீடித்தது.
3. தேர்தல் பணியிலிருந்த ராணுவ வீரர் துப்பாக்கி சூடு நடத்தியதில் சக வீரர் உயிரிழப்பு
தேர்தல் பணியிலிருந்த ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் சகவீரர் உயிரிழந்த சம்பவம் நேரிட்டுள்ளது.
4. மேற்கு வங்காளத்தில் வாக்குச்சாவடி அருகே வன்முறை: தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க பாஜக முடிவு
மேற்கு வங்காளத்தில் வாக்குச்சாவடி அருகே பாஜக தொண்டர்களும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் மோதிக்கொண்டனர்.
5. மேற்கு வங்காளத்தில் வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தொண்டர் அடித்துகொலை
மேற்கு வங்காளத்தில் வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தொண்டர் அடித்துகொல்லப்பட்டார்.