தேசிய செய்திகள்

பொங்கல் விழாவையொட்டி கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை + "||" + Pongal Festival Holidays in 6 districts in Kerala

பொங்கல் விழாவையொட்டி கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை

பொங்கல் விழாவையொட்டி கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை
பொங்கல் விழாவையொட்டி, கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை, இடுக்கி, பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கேரள மக்களின் கலாசாரம் பாரம்பரியத்துடன் இணைந்து வாழும் தமிழின மக்கள் கேரளாவில் ஓணம் உள்பட அனைத்து விழாக்களையும் கொண்டாடி வருகிறார்கள்.


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் இந்த மாவட்டங்களுக்கு பொங்கல் தினத்தன்று (15-ந்தேதி) பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் சபரிமலை மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, பத்தனம்திட்டை மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பின்லேடன் படத்துடன் கேரளாவில் சுற்றிய கார்
பின்லேடன் படத்துடன் கேரளாவில் கார் ஒன்று சுற்றி திரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
2. இலங்கை தாக்குதல் பயங்கரவாதி தமிழகம், கேரளாவில் தொடர்பில் இருந்ததாக தகவல்
இலங்கை தாக்குதல் பயங்கரவாதி ஜக்ரான் ஹாசிம் தமிழகம் மற்றும் கேரளாவில் தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #SriLankaBlasts #TamilNadu #Kerala #NIA
3. ஐ.எஸ். பயங்கரவாதம்: கேரளாவில் தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடி ரெய்டு
ஐ.எஸ். பயங்கரவாதம் தொடர்பாக கேரளாவில் தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
4. வாக்குப்பதிவு சதவீதம் உயர்வு: செய்தியாளர்களிடம் கோபமடைந்த பினராயி விஜயன்
கேரளாவில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களின் கேள்வியால் கோபம் அடைந்தார். #PinarayiVijayan #Kerala #KeralaVotes
5. கேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் சரிதா நாயர்
கேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக சரிதா நாயர் கூறியுள்ளார்.