தேசிய செய்திகள்

பத்ரிநாத் உள்பட 4 புனித தலங்களுக்கு செல்லும் ‘சார்தாம்’ திட்டத்தை தொடர அனுமதி + "||" + Allow to continue the 'Sartham' project going to 4 sacred places, including Badrinath

பத்ரிநாத் உள்பட 4 புனித தலங்களுக்கு செல்லும் ‘சார்தாம்’ திட்டத்தை தொடர அனுமதி

பத்ரிநாத் உள்பட 4 புனித தலங்களுக்கு செல்லும் ‘சார்தாம்’ திட்டத்தை தொடர அனுமதி
பத்ரிநாத் உள்பட 4 புனித தலங்களுக்கு செல்லும் சார்தாம் திட்டத்தை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

உத்தரகாண்ட் மாநிலத்தில் ‘சார்தாம்’ என அழைக்கப்படும் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய 4 புனித தலங்களுக்கு அனைத்து காலநிலையிலும் சென்று வரக்கூடிய வகையில் இந்த இணைப்பு சாலை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சி திட்டத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயமும் அனுமதி அளித்தது.


இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாரிமன், வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு, சார்தாம் வளர்ச்சி திட்டத்தை தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டது.