தேசிய செய்திகள்

ஜி.எஸ்.டி.யில் சலுகை: காங்கிரஸ் நிதி மந்திரிகளுக்கு ப.சிதம்பரம் பாராட்டு + "||" + GST offer: P. Chidambaram praises Congress Finance Ministers

ஜி.எஸ்.டி.யில் சலுகை: காங்கிரஸ் நிதி மந்திரிகளுக்கு ப.சிதம்பரம் பாராட்டு

ஜி.எஸ்.டி.யில் சலுகை: காங்கிரஸ் நிதி மந்திரிகளுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
ஜி.எஸ்.டி.யில் சலுகை கிடைத்தது தொடர்பாக, காங்கிரஸ் நிதி மந்திரிகளுக்கு ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கவுன்சிலின் 32-வது கூட்டம் டெல்லியில் நடந்த போது பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டன.

இது குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஜி.எஸ்.டி.யில் உள்ள பல்வேறு குளறுபடிகள், பிரச்சினைகளுக்கு கவுன்சில் கூட்டத்தில் தீர்வு காணப்பட்டு உள்ளது. சிறுவணிகத்தை பாதுகாக்கும் வகையில் ஜி.எஸ்.டி. விலக்கு வரப்பு ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களை சேர்ந்த 6 நிதி மந்திரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்கள் தரப்பு பிரச்சினைகளை எடுத்து கூறியதால் இது போன்ற சலுகைகள் கிடைத்துள்ளது. மேலும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கும் ஓரளவு நிம்மதி தரும் வகையில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக காங்கிரஸ் நிதி மந்திரிகளுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.