தேசிய செய்திகள்

பிரதமர் மோடி 15-ந் தேதி கேரளா வருகிறார் - பத்மநாபசுவாமி கோவிலில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் + "||" + Prime Minister Narendra Modi arrives in Kerala on 15th - Padmanabhaswamy temple starts various projects

பிரதமர் மோடி 15-ந் தேதி கேரளா வருகிறார் - பத்மநாபசுவாமி கோவிலில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி 15-ந் தேதி கேரளா வருகிறார் - பத்மநாபசுவாமி கோவிலில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
பிரதமர் மோடி 15-ந் தேதி கேரளா வர உள்ளார். அங்குள்ள பத்மநாபசுவாமி கோவிலில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
திருவனந்தபுரம், 

பிரதமர் நரேந்திரமோடி வருகிற 15-ந்தேதி கேரளா வருகிறார். மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் சுவடேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ரூ.78 கோடியே 88 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சிப்பணிகளை பிரதமர் மோடி அன்றைய தினம் தொடங்கி வைக்கிறார்.

நிகழ்ச்சியில் கேரள கவர்னர் பி.சதாசிவம், முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த தகவலை மத்திய சுற்றுலாத்துறை ராஜாங்க மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் தெரிவித்தார்.

பிரதமர் மோடி இந்த மாதம் 2-வது முறையாக வருகிற 27-ந்தேதி மீண்டும் கேரளா வருகிறார். திருச்சூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வார் என கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்: கனடா பிரதமர் வாழ்த்து
தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு கனடா பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
2. கட்சி அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு : ‘வெற்றியை மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்’ - பிரதமர் மோடி பேச்சு
பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் வெற்றியை நாட்டு மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என தொண்டர்களிடையே கூறினார்.
3. முழு பெரும்பான்மையுடன் தொடர்ந்து 2 தடவை ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் மோடி
முழு பெரும்பான்மையுடன், தொடர்ந்து 2–வது முறையாக ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அல்லாத முதலாவது பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
4. ‘‘இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி’’ நாடாளுமன்ற தேர்தல் முடிவு பற்றி பிரதமர் மோடி கருத்து
இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என்று நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
5. வாரணாசியில் 4¾ லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் பிரதமர் மோடி அமோக வெற்றி
வாரணாசி தொகுதியில் 4¾ லட்சத்துக்கு மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.