கிரிக்கெட்

சர்ச்சை வீரர் பாண்ட்யாவுக்கு பதிலாக தமிழக வீரர் அணியில் சேர்ப்பு + "||" + Vijay Shankar, Shubman Gill replace Hardik Pandya, KL Rahul for Australia, NZ series

சர்ச்சை வீரர் பாண்ட்யாவுக்கு பதிலாக தமிழக வீரர் அணியில் சேர்ப்பு

சர்ச்சை வீரர் பாண்ட்யாவுக்கு பதிலாக தமிழக வீரர் அணியில் சேர்ப்பு
இந்திய கிரிக்கெட் அணியில் சர்ச்சை வீரர் ஹர்தீக் பாண்ட்யாவுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது.  இந்த நிலையில், டி.வி. நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோரை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்ட அவர்கள் தாயகம் திரும்பினர்.

இந்நிலையில், அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ள ஹர்தீக் பாண்ட்யாவுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இதேபோன்று சர்ச்சைக்குள்ளான கே.எல். ராகுலுக்கு பதிலாக மயங்க் அகர்வாலை சேர்க்க தேர்வாளர்கள் முதலில் முடிவு செய்தனர்.  பின்னர் அகர்வால் விளையாட இயலாத சூழ்நிலையில் அவருக்கு பதில் பஞ்சாபை சேர்ந்த சுப்மேன் கில்லை அணியில் சேர்க்க முடிவானது.  இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுவர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு அரசு வேலை, ஊக்கத்தொகை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
விளையாட்டு போட்டியில் சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு அரசு வேலைக்கான நியமன ஆணை மற்றும் ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.
2. புல்வாமா தாக்குதல்; தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி நியமன ஆணைகளை முதல் அமைச்சர் பழனிசாமி வழங்கினார்.