மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது; இலங்கை கடற்படை நடவடிக்கை + "||" + 11 fishermen arrested by Sri Lankan Navy

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது; இலங்கை கடற்படை நடவடிக்கை

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது; இலங்கை கடற்படை நடவடிக்கை
தமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்து இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
ராமேஸ்வரம்,

இலங்கை கடற்பகுதியில் எல்லை கடந்து மீன்பிடித்தனர் என கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை சமீபத்தில் கைது செய்திருந்தது.

இந்த நிலையில், கிளிநொச்சி அருகே மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்து உள்ளது.  இவர்கள் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ஆவர்.  அவர்களிடம் இருந்து படகுகள், வலைகள் உள்ளிட்டவற்றையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட நம்புதாளை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் மனு
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட நம்புதாளை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கலெக்டரிடம் மனு அளிஹ்தனர்.
2. இலங்கை கடற்படையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினர்
இலங்கை கடற்படையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
3. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
4. ராமேசுவரம் மீனவர்களை கட்டி வைத்து இலங்கை கடற்படையினர் தாக்குதல் வலைகளை அறுத்து விரட்டி அடித்தனர்
நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சரமாரியாக தாக்கியதுடன், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டியடித்தனர்.
5. இலங்கை கடற்படையினர் விரட்டியதில் கடலுக்குள் விழுந்து பலியான மீனவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்
இலங்கை கடற்படையினர் விரட்டியதில் கடலுக்குள் தவறி விழுந்து பலியான மீனவரின் குடும்பத்துக்கு முதல்–அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்.