தேசிய செய்திகள்

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை; அல்-பதர் இயக்க தளபதி உள்பட 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை + "||" + Al-Badr commander Zeenat-ul-Islam killed in encounter in Kulgam

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை; அல்-பதர் இயக்க தளபதி உள்பட 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை; அல்-பதர் இயக்க தளபதி உள்பட 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் அல்-பதர் தீவிரவாத இயக்க தளபதி உள்பட 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் யாரிபோரா பகுதியில் கட்போரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.  இதனை தொடர்ந்து அவர்கள் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அங்கிருந்த தீவிரவாதிகள் படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட தொடங்கினர்.  தீவிரவாதிகள் சரண் அடைவதற்கு அவர்களுக்கு வாய்ப்பொன்று வழங்கப்பட்டது.  ஆனால் அவர்கள் தொடர்ந்து சுட முயன்றனர்.

இதற்கு பதிலடியாக படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.  இவர்களில் ஒருவன் அல்-பதர் தீவிரவாத இயக்கத்தின் தளபதி ஜீனத் உல் இஸ்லாம் என்பது தெரிய வந்துள்ளது.  மற்றொருவன் ஷகீர் தர்.

இஸ்லாம் கடந்த 2015ம் ஆண்டில் இருந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான்.  அல் பதர் இயக்கத்தினை வலுப்படுத்த வேண்டும் என அமைப்புகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் பேரில் கடந்த வருடம் ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பில் இருந்து அல் பதர் இயக்கத்தில் சேர்ந்து உள்ளான்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
2. ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் பலி
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
3. சிரியாவில் நச்சு வாயு தாக்குதல்; 107 பேர் மூச்சு திணறலால் அவதி
சிரியாவில் நச்சு வாயு தாக்குதலில் 107 பேர் மூச்சு திணறலால் அவதியடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
4. காஷ்மீர் என்கவுண்டர்: 6 தீவிரவாதிகள் சுட்டு கொலை; ராணுவ வீரர் மரணம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 6 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
5. சிரியாவில் தீவிரவாதிகள் நடத்திய ரசாயன வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலி
சிரியாவில் நடந்த ரசாயன வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.