தேசிய செய்திகள்

சிறு நிறுவனங்களின் முன்னேற்றமே நமது பிரதான இலக்கு - பிரதமர் மோடி பேச்சு + "||" + PM while interacting with BJP booth-level workers from Tamil Nadu

சிறு நிறுவனங்களின் முன்னேற்றமே நமது பிரதான இலக்கு - பிரதமர் மோடி பேச்சு

சிறு நிறுவனங்களின் முன்னேற்றமே நமது பிரதான இலக்கு - பிரதமர் மோடி பேச்சு
சிறு நிறுவனங்களின் முன்னேற்றமே நமது பிரதான இலக்கு என்று பிரதமர் மோடி பேசினார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் களப்பணியாற்றுவது குறித்து பாஜக நிர்வாகிகளுடன் மோடி கலந்துரையாடல் நடத்தி வருகிறார். இந்நிலையில், விருதுநகர், சிவகங்கை, தேனி, பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி பேசுகையில்,

சிறு நிறுவனங்களின் முன்னேற்றமே நமது பிரதான இலக்கு. சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு விரைவாக ஒப்புதல் மற்றும் மின் இணைப்பு வழங்கி வருகிறோம்.   நாம் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறோம். சிலர் குடும்பத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுகின்றனர். 

பாஜகவின் வெற்றி, மோடி, அமித்ஷாவினால் கிடைத்தது அல்ல. நிர்வாகிகள், தொண்டர்கள், பூத் கமிட்டியினரின் கடும் முயற்சியால் கிடைத்தது. நீங்கள் கடுமையாக முயற்சித்தால் வெற்றி கிடைக்கும். அனைவரும் ஒன்றாக இணைந்து, நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர செயல்பட வேண்டும். அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லி மிகப்பெரிய வெற்றி கிடைக்க பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார் ‘புதிய வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது’ பிரதமர் மோடி பேச்சு
தமிழக பாரதீய ஜனதா நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, புதிய வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது என்று கூறினார்.
2. ”நான் எப்பொழுதும் தமிழ் மொழியின் ரசிகன்”பிரதமர் மோடி பேச்சு
நான் எப்பொழுதும் தமிழ் மொழியின் ரசிகன் என்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் விருதுநகர் பாஜக நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.