உலக செய்திகள்

உலக வங்கியின் தலை‌வராகிறாரா அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கோ ட்ரம்ப்? + "||" + Ivanka Trump, Nikki Haley In Race For World Bank President's Post: Report

உலக வங்கியின் தலை‌வராகிறாரா அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கோ ட்ரம்ப்?

உலக வங்கியின் தலை‌வராகிறாரா அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கோ ட்ரம்ப்?
உலக வங்கியின் தலைவராக அமெரிக்க அதிபர் மகள் இவாங்கோ ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நியூயார்க்,

உலக வங்கியின் மீது அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதாக மற்ற நாடுகள் குற்றச்சாட்டுகள் எழுப்பிவரும் நிலையில் டிரம்ப் நிர்வாகத்திற்கும் உலக வங்கிக்கும் கடுமையான போர் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் உலக வங்கியின் தலைவர் ஜிம் கி யோங் திடீரென ராஜினாமா செய்தது அதிர்வலையை ஏற்படுத்தியது.

கிம்முக்கு அடுத்து அவரது இடத்தை நிரப்புவது தொடர்பாக உலக வங்கியின் இயக்குநர்கள் குழு முடிவு செய்யும். கிம் விடைபெறுவதை அடுத்து அவரது இடத்தில் தற்காலிகமாக தற்போது உலக வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள கிறிஸ்டாலினா ஜியார்ஜியவா, நியமிக்கப்படுவதாகவும் உடனடியாக கிம் இடத்திற்கு ஒரு நிரந்தர தலைவரை அமர்த்தும் பணியைத் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  உலக வங்கியின் தலைவராக அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கோ ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக வங்கி தலைவர் பதவிக்கு இவாங்கோ ட்ரம்ப், ஐ.நாவின் அமெரிக்க முன்னாள் தூதர் நிக்கி ஹா லே ஆகியோர் பரிந்துரைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

உலக வங்கியில் அமெரிக்கா மிகப்பெரிய பங்குதாரராக இருப்பதால் அமெரிக்கர்களே உலக வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.