மாநில செய்திகள்

"வான்கோழி ஒருபோதும் மயிலாக முடியாது” திமுக குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சனம் + "||" + Minister Vijayapaskar Review

"வான்கோழி ஒருபோதும் மயிலாக முடியாது” திமுக குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சனம்

"வான்கோழி ஒருபோதும் மயிலாக முடியாது” திமுக குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சனம்
வான்கோழி ஒருபோதும் மயிலாக முடியாது என்று திமுக குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை,

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  நிருபர்களிடம் கூறியதாவது:-

பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கு 1.72 லட்சம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் சிறப்பு பேருந்துகள் டிக்கெட் முன்பதிவு மூலம் ரூ.8.26 கோடி வசூல் ஆகி உள்ளது. 

வான்கோழி ஒருபோதும் மயிலாக முடியாது. பொங்கல் பரிசு உள்ளிட்ட முதலமைச்சரின் செயல்பாடுகள் மக்களிடம் வரவேற்புபெற்று வருகிறது. வரவேற்பு பெறுவதை பொறுக்காமல் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவதூறு பரப்பி வருகின்றனர். அவதூறுகளை மக்கள் ஏற்கமாட்டார்கள், எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முதலமைச்சர் முறியடிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.