தேசிய செய்திகள்

மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுக்கு எதிராக மகள் போராட்டம் + "||" + Daughter's fight against Union Minister Ramvilas Paswan

மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுக்கு எதிராக மகள் போராட்டம்

மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுக்கு எதிராக மகள் போராட்டம்
மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுக்கு எதிராக அவரது மகள் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாட்னா,

மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானின் முதல் மனைவிக்கு பிறந்த பெண் ஆஷா பஸ்வான். இவருக்கும், பஸ்வானுகும் இடையே தற்போது நல்லுறவு கிடையாது. ஆஷா பஸ்வான், ராஷ்டிரீய ஜனதாதளத்தில் இருக்கிறார்.


இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு ராம்விலாஸ் பஸ்வான் அளித்த பேட்டியில், ‘‘படிப்பறிவற்றவர் கூட இம்மாநில முதல்-மந்திரியாக இருந்துள்ளார்’’ என்று கூறினார். அவர் முன்னாள் முதல்-மந்திரி ராப்ரிதேவியை குறிப்பிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதை சுட்டிக்காட்டி, ராம்விலாஸ் பஸ்வானுக்கு எதிராக அவருடைய மகள் ஆஷா தர்ணா போராட்டத்தில் குதித்துள்ளார். பஸ்வான் மன்னிப்பு கேட்கும்வரை எனது போராட்டத்தை கைவிட மாட்டேன் என்றும் அவர் கூறினார்.