தேசிய செய்திகள்

குடியுரிமை மசோதாவுக்கு மேகாலயா பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு - பிரதமருக்கு கடிதம் எழுதினர் + "||" + Meghalaya BJP for citizenship bill MLAs protest - Wrote a letter to the Prime Minister

குடியுரிமை மசோதாவுக்கு மேகாலயா பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு - பிரதமருக்கு கடிதம் எழுதினர்

குடியுரிமை மசோதாவுக்கு மேகாலயா பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு - பிரதமருக்கு கடிதம் எழுதினர்
குடியுரிமை மசோதாவுக்கு மேகாலயா பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதினர்.
ஷில்லாங்,

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த மசோதாவுக்கு மேகாலயா மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அலெக்சாண்டர் ஹெக், சன்போர் ஷல்லாய் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-


வங்காளதேசத்தில் இருந்து ஏற்கனவே சட்டவிரோதமாக இந்தியாவுக்கு அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த மசோதா மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும். இந்த மசோதா இப்பகுதி மக்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே இந்த சட்ட திருத்த மசோதாவை வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறைப்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் மாநில மக்களின் நலனுக்காக, கட்சியை விட்டு விலகுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை மசோதாவால் “உங்கள் உரிமை பாதிக்கப்படாது” வடகிழக்கு மாநில மக்களுக்கு பிரதமர் மோடி உறுதி
குடியுரிமை மசோதாவால் “உங்கள் உரிமை பாதிக்கப்படாது” என வடகிழக்கு மாநில மக்களுக்கு பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.