தேசிய செய்திகள்

எத்தனை கூட்டணிகள் அமைந்தாலும் மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் - மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி நம்பிக்கை + "||" + How many alliances are set up among the BJP again to rule the regime - Minister Mukhtar Abbas Naqvi believes

எத்தனை கூட்டணிகள் அமைந்தாலும் மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் - மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி நம்பிக்கை

எத்தனை கூட்டணிகள் அமைந்தாலும் மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் - மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி நம்பிக்கை
எத்தனை கூட்டணிகள் அமைந்தாலும் மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் என மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து இருப்பது பற்றி பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வியிடம் நேற்று நிருபர்கள் கருத்து கேட்டனர்.


அப்போது அவர் கூறுகையில், நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா சிறப்பான வெற்றியை பெறும் என்றும், எத்தனை கூட்டணிகள் அமைந்தாலும் மத்தியில் தங்கள் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். தனித்து நின்று பாரதீய ஜனதாவை எதிர்க்க முடியாது என்பதாலேயே சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.