தேசிய செய்திகள்

மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார்: ஊழல் கண்காணிப்பு ஆணையரை நீக்கவேண்டும் - காங்கிரஸ் வற்புறுத்தல் + "||" + Acting as the puppet of the federal government: Corruption Monitoring Commissioner should be removed - Congress Of coercion

மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார்: ஊழல் கண்காணிப்பு ஆணையரை நீக்கவேண்டும் - காங்கிரஸ் வற்புறுத்தல்

மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார்: ஊழல் கண்காணிப்பு ஆணையரை நீக்கவேண்டும் - காங்கிரஸ் வற்புறுத்தல்
மத்திய அரசின் கைப்பாவையாக ஊழல் கண்காணிப்பு ஆணையர் செயல்படுகிறார் என்றும், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் காங்கிரஸ் வற்புறுத்தி உள்ளது.
புதுடெல்லி,

சி.பி.ஐ. இயக்குனராக பதவி வகித்து வந்த அலோக் வர்மா, தன்னை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவரை மீண்டும் பணியில் தொடர அனுமதித்தது. அதே நேரம் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டின் விசாரணை அடிப்படையில் சி.பி.ஐ. இயக்குனரை நியமிக் கும் தேர்வுக்குழு நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது.


இதையடுத்து தேர்வுக்குழு அவசரமாக கூடி அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்ற நாளில் அவரின் சி.பி.ஐ. இயக்குனர் பதவியை பறித்தது. அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தேர்வுக்குழு கூறியது.

அலோக் வர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுதாரி தான் என்று காங்கிரஸ் கருதுகிறது.

இதுபற்றி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுதாரி மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். அவர் மத்திய அரசின் தூதுவர் போலவும் செயல்படுகிறார்.

சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகிறார். ஊழல் கண்காணிப்பு ஆணையம் மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்டது என்பதையே அவர் மறந்து விட்டார். மேலும் ரபேல் போர் விமான ஊழல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடவும் சவுதாரி மறுத்து வருகிறார்.

எனவே அவரை உடனடியாக ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் அல்லது அவரே தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமோ அல்லது மத்திய அரசோ உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. அரசு தொழிற்கல்வி ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பலன்கள்; மத்திய அரசு ஒப்புதல்
அரசு தொழிற்கல்வி ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பலன்களை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
2. 8ஆம் வகுப்பு வரை இந்தி பாடம் கட்டாயமாக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு
8ஆம் வகுப்பு வரை இந்தி பாடம் கட்டாயமாக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
3. சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் செயல்பட சுப்ரீம் கோர்ட் உத்தரவு: காங்கிரஸ் வரவேற்பு
சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் செயல்படலாம் என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.
4. மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.120.50 குறைப்பு
மானியம் இல்லா சிலிண்டர் விலை ரூ.120.50 குறைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
5. மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி இணைப்பு - ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி இணைப்பு குறித்து ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.