மாநில செய்திகள்

கோடநாடு விவகாரம்: இன்று மாலை ஆளுநரை சந்தித்து மனு அளிக்கிறார் மு.க ஸ்டாலின் + "||" + DMK Leader MK stalin to meet Governor

கோடநாடு விவகாரம்: இன்று மாலை ஆளுநரை சந்தித்து மனு அளிக்கிறார் மு.க ஸ்டாலின்

கோடநாடு விவகாரம்: இன்று மாலை ஆளுநரை சந்தித்து மனு அளிக்கிறார் மு.க ஸ்டாலின்
கோடநாடு விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் மனு அளிக்கிறார்.
சென்னை,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின. 

இதை மறைக்கவே ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மற்றொரு குற்றவாளியான மனோஜ், ‘தெகல்கா’ இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந் தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டினார்கள்.

மேலும் கோடநாடு கொலை-கொள்ளை சம்பவங்கள் தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார். இந்த நிலையில்,  கோடநாடு விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மனு அளிக்க உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. கொடநாடு விவகாரம்: ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு
கொடநாடு விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2. கோடநாடு சம்பவத்தை கூலிப்படையினர் செய்தனர்; திமுக நாடகம் - முதல்-அமைச்சர் பழனிசாமி
கோடநாடு சம்பவத்தை கூலிப்படையினர் செய்தனர் என முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
3. பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாயும் கிடையாது, கூட்டணியும் கிடையாது - மு.க.ஸ்டாலின் அறிக்கை
பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாயும் கிடையாது, கூட்டணியும் கிடையாது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
4. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. ”செந்தில் பாலாஜி சென்றதில் வருத்தம் இல்லை” எங்கிருந்தாலும் வாழ்க- டிடிவி தினகரன்
”யாரையும் பிடித்து வைக்க முடியாது; செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க” என டிடிவி தினகரன் பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.