தேசிய செய்திகள்

பயங்கரவாத ஊடுருவலை தடுக்க இதுவரை எதுவும் செய்யவில்லை? இம்ரான்கான் நம்பகத்தன்மை உடையவரா? + "||" + Calling Imran Khan’s bluff

பயங்கரவாத ஊடுருவலை தடுக்க இதுவரை எதுவும் செய்யவில்லை? இம்ரான்கான் நம்பகத்தன்மை உடையவரா?

பயங்கரவாத ஊடுருவலை தடுக்க இதுவரை எதுவும் செய்யவில்லை? இம்ரான்கான் நம்பகத்தன்மை உடையவரா?
பயங்கரவாத ஊடுருவலை தடுக்க இதுவரை எதுவும் செய்யவில்லை. இம்ரான்கான் நம்பகத்தன்மை உடையவரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
புதுடெல்லி

அரசியல் தலைவர்கள் ஒவ்வொரு தொழில் துறையில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  ரியல் எஸ்டேட் அதிபர்,  முன்னாள் இங்கிலாந்து பிரதமர்  டேவிட் கேமரூன் மக்கள் தொடர்பு  அதிகாரியாக இருந்தவர். ஐஸ்லாந்தின் முன்னாள் பிரதம மந்திரி ஜோஹன்னா சிகர்டாரோடிர் ஒரு விமான பணிப்பெண்ணாக இருந்தார்.

இது போல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். இதனால் நாம் அவரை எளிதாக எடைபோடக்கூடாது. இம்ரான்கானின்  பின்னணி குறித்து கவலை இல்லை. ஆனால் அவர் மீதான நம்பகத்தன்மை மீது சந்தேகம் உள்ளது.

பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு விரைவில் 'புதிய பாகிஸ்தான்' ஒன்றை உருவாக்குவதாக இம்ரான்கான் உறுதியளித்தார். இந்தியா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது பழைய பாட்டிலில் புதிய மது என்று.

பயங்கரவாத ஊடுருவலை தடுக்க இம்ரான்கான் இதுவரை எதுவும் செய்யவில்லை. பாகிஸ்தானின் இராணுவ தளபதிகள் தங்களுக்கென  ஒரு சட்டம் வைத்து உள்ளனர்.

பாகிஸ்தான் இந்தியாவுடன் சமாதானத்தை விரும்புகிறது என்று பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜவேத் அறிவித்த போதிலும்,

காஷ்மீர் எல்லையில் இந்திய இலக்குகளைத் தாக்கத் தொடங்கும், பாஜ்வாவின்  ஒட்டுமொத்த கட்டளையின் கீழ் பாகிஸ்தானின் முரட்டு எல்லை  நடவடிக்கை குழு (பிஏடி) செயல்படுகிறது.

இந்திய இராணுவம் எல்லைக்குள் அத்துமீறும் பயங்கரவாதிகளை தினமும் துரத்தி அடித்துவருகிறது.

2018-ல் 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இது 2017-ஐ விட  50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இன்னும்  280-300 பயங்கரவாதிகள் பள்ளத்தாக்கு பகுதியில் பதுங்கி இருந்து  தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக இந்திய ராணுவம் மதிப்பிடுகிறது.

பாகிஸ்தானிய இராணுவத்தால் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் போர்நிறுத்த மீறல்கள், கணிசமாக மே 2018-ல் இருந்து வீழ்ச்சி  அடைந்துள்ளன. சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் மாநிலத்தில் பாகிஸ்தானிய பயங்கரவாத பகுதிகளை சுற்றியுள்ள சுற்றுச்சூழலை இறுக்கி உள்ளனர்.

2018-ம் ஆண்டு ஜூன் மாதம் ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி கொண்டு வரப்பட்டது முதல் ஜனாதிபதியின் இந்திய பாதுகாப்புப் படைகள் பள்ளத்தாக்கில் செயலில் உள்ளன. பல பாகிஸ்தானிய ஆதரவு பயங்கரவாத குழுக்களின் தலைமையை இலக்காகக் கொண்டு வெற்றி பெற்றிருக்கின்றன.

பாகிஸ்தான் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய வேண்டுமென்றால்  இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத்தை நிறுத்துவதன் மூலம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் 3 அல் கொய்தா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் 3 அல் கொய்தா பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2. ‘மோசமாக ஆடினால் தாயகம் திரும்ப முடியாது’ பாகிஸ்தான் வீரர்களுக்கு கேப்டன் சர்ப்ராஸ் அகமது எச்சரிக்கை
உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவிடம் ‘சரண்’ அடைந்ததால் பாகிஸ்தான் அணி கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது.
3. பாகிஸ்தானில் பயங்கரம்: மருத்துவமனையில் துப்பாக்கி சண்டை - 5 பேர் பலி
பாகிஸ்தானில் மருத்துவமனை ஒன்றில் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 பேர் பலியாகினர்.
4. ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்: சக வீரர்களுக்கு பாக்.கேப்டன் எச்சரிக்கை
நாடு திரும்பும் போது ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று சக வீரர்களுக்கு பாகிஸ்தான் கேப்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ‘நெருக்கடிக்கு ஆளாகாமல் ஆடியது வெற்றிக்கு வழிவகுத்தது’ - இந்திய அணி கேப்டன் விராட்கோலி
பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நெருக்கடிக்கு ஆளாகாமல் ஆடியது வெற்றிக்கு வழிவகுத்தது என்று இந்திய அணி கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.