தேசிய செய்திகள்

அமித் ஷா நலமாக உள்ளார், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் -பா.ஜனதா தகவல் + "||" + Shah doing well will be discharged in a day or two BJP

அமித் ஷா நலமாக உள்ளார், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் -பா.ஜனதா தகவல்

அமித் ஷா நலமாக உள்ளார், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் -பா.ஜனதா தகவல்
அமித் ஷா நலமாக உள்ளார், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என பா.ஜனதா தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலெரியா தலைமையிலான மருத்துவ குழு அமித்ஷாவின் உடல் நிலையை கண்காணித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி சவுபேய் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அமித் ஷாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் அமித் ஷா நலமாக உள்ளார், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என பா.ஜனதா தகவல் தெரிவித்துள்ளது.

பா.ஜனதா செய்திப்பிரிவு தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அணில் பாலுனி பேசுகையில், “பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா நலமாக உள்ளார். அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். உடல்நலம் பெற வாழ்த்து கூரிய அனைவருக்கும் நன்றி...” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமேதியில் சொந்த வீடு கட்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
அமேதியில் சொந்த வீடு கட்டும் நடவடிக்கையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
2. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் மீது கட்சிக்கொடி : அரசியல் கட்சிகள் கண்டனம்
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரரின் மீது கட்சிக்கொடி போர்த்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. சந்திரபாபு நாயுடுவுக்கு புதிய தலைவலி... பா.ஜனதாவிற்கு தாவ மாநிலங்களவை எம்.பி.க்கள் முடிவு என தகவல்
தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் பா.ஜனதாவில் சேர வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
4. பா.ஜனதா இன்னும் வெற்றியின் உச்சத்தை தொடவில்லை : அமித் ஷா சொல்கிறார்
303 தொகுதிகளை கைப்பற்றி இருந்தாலும், பா.ஜனதா இன்னும் வெற்றியின் உச்சத்தை தொடவில்லை என்று அமித் ஷா கூறியுள்ளார்.
5. கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது: பா.ஜனதாவுடன் விரிசல் இல்லை - நிதிஷ் குமார் சொல்கிறார்
கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது என்றும், பா.ஜனதாவுடன் விரிசல் இல்லை என்றும் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...