தேசிய செய்திகள்

பிரதமராக மம்தா பானர்ஜிக்கு எல்லா தகுதிகளும் உள்ளன; கர்நாடக முதல்வர் குமாரசாமி + "||" + Mamata Banerjee has all capabilities to be PM: HD Kumaraswamy

பிரதமராக மம்தா பானர்ஜிக்கு எல்லா தகுதிகளும் உள்ளன; கர்நாடக முதல்வர் குமாரசாமி

பிரதமராக மம்தா பானர்ஜிக்கு எல்லா தகுதிகளும் உள்ளன; கர்நாடக முதல்வர் குமாரசாமி
பிரதமராக மம்தா பானர்ஜிக்கு எல்லா தகுதிகளும் உள்ளன என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார்.
புதுடெல்லி

கர்நாடக முதல்வர் குமாரசாமி  கூறியதாவது:-

தேர்தலுக்கு முன்னர் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தலைமையை தீர்மானித்தல் என்பது தேர்தல் வெற்றி பெற ஒரு அளவுகோல் அல்ல. 

நாட்டு மக்கள் நரேந்திர மோடி நிர்வாகத்தால் முற்றிலும் ஏமாற்றமடைந்துள்ளனர். பல்வேறு  மாநிலங்களுக்கு சொந்தமான பிரச்சினைகள் உள்ளன. தேர்தலுக்கு முன்பு ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

திறமையான தலைவர்கள் நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச்செல்ல முடியும். இந்த தலைவர்கள் முந்தைய அரசாங்கங்கள் தோல்வியடைந்த விஷயங்களை முன்னெடுத்து செல்ல முடியும்.

தேர்தல் முடிந்ததும் எல்லோரும் ஆலோசித்து  எங்கள் தலைவரை தேர்வு செய்வோம்.

மம்தா பானர்ஜி எளிமையான மிகவும் சிறந்த நிர்வாகி ஆவார். நாட்டை வழி நடத்த மம்தா பானர்ஜி திறமையான தலைவர் என நான் நினைக்கிறேன். மேற்கு வங்காளத்தை பல ஆண்டுகளாக அவர் சிறப்பாக வழி நடத்தி அதனை நிரூபித்து உள்ளார் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி: மம்தா பானர்ஜியின் ராஜினாமா முடிவை கட்சி தலைவர்கள் நிராகரித்தனர்
நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பல இடங்களில் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று மம்தா பானர்ஜி எடுத்த ராஜினாமா முடிவை கட்சி தலைவர்கள் நிராகரித்தனர்.
2. முதல்-மந்திரியாக தொடர விருப்பம் இல்லை - மம்தா பானர்ஜி
முதல்-மந்திரியாக தொடர விருப்பம் இல்லை என கட்சியினரிடம் தெரிவித்தேன், ஆனால் என்னுடைய ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டனர் என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
3. மம்தா பானர்ஜியின் ‘கிங் மேக்கர்’ கனவு தகர்ந்தது
மேற்கு வங்காள மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜியின் ‘கிங் மேக்கர்’ கனவு தகர்ந்தது.
4. மேற்கு வங்காளத்தில் கால் பதித்த பாஜக! -மம்தா அதிர்ச்சி
மேற்கு வங்காளத்தில் பாஜக 2-வது இடத்தை கைப்பற்றி திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
5. மம்தா பானர்ஜியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு: தேர்தல் கருத்து கணிப்பு உறுதியானதல்ல என அறிவிப்பு
ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.