தேசிய செய்திகள்

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை + "||" + Three terrorists killed in the encounter between terrorists and security forces in JK

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது.

ஸ்ரீநகர்,


பத்காம் மாவட்டம் சாதோர்யா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை பாதுகாப்பு படை தொடங்கியது. அப்போது இருதரப்பு இடையே சண்டை வெடித்தது. உடனடியாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெருக்களுக்கு வந்து பாதுகாப்பு படையினருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அவர்களை பாதுகாப்பு படையினர் விரட்டினர். பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையில் நடைபெற்ற சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் பயங்கரவாதிகள் மேலும் பதுங்கி உள்ளார்களா? என்று பாதுகாப்பு படையினர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: காங்கிரஸ்
புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
2. பயங்கரவாதிகள், அவர்களுக்கு உதவி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: இந்தியா-அர்ஜென்டினா கூட்டு அறிக்கை
பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா-அர்ஜென்டினா கூட்டு அறிக்கை வெளியிட்டது.
3. ஜம்முவில் 4-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 4-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
4. வன்முறை சம்பவத்தை கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு; இயல்பு வாழ்க்கை முடக்கம்
வன்முறை சம்பவத்தை கண்டித்து காஷ்மீரில் நடைபெற்ற முழு அடைப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியது.
5. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான துணை ராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் அஞ்சலி
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான துணை ராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஆசிரியரின் தேர்வுகள்...