தேசிய செய்திகள்

காங்கிரஸ் விரும்பினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் - கர்நாடக முதல்வர் குமாரசாமி + "||" + I am ready to step down-Karnataka CM HD Kumaraswamy

காங்கிரஸ் விரும்பினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் - கர்நாடக முதல்வர் குமாரசாமி

காங்கிரஸ் விரும்பினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் - கர்நாடக முதல்வர் குமாரசாமி
காங்கிரஸ் விரும்பினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார்.
பெங்களூரு,

கர்நாடக முதல்வர் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

காங்கிரஸ் விரும்பினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், சித்தராமையாதான் முதல்வர் என்று கூறி வருகின்றனர். அவர்கள் எல்லை கடந்து செல்கிறார்கள். அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ், தனது எம்.எல்.ஏ.க்களை கட்டுக்குள் வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள  கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா,  சித்தராமையா சிறந்த முதல்வர் ஆவார். அவர் எங்கள் தலைவர். எம்.எல்.ஏ.க்கள் அவரை (சித்தராமையா) தங்களுக்கான முதல்வர் என  அவர்களது கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் என்ன தவறு?. இருப்பினும் அவருடன் (கர்நாடக முதல்வர் குமாரசாமி) இருப்பதற்கு நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம் என கூறினார்.