தேசிய செய்திகள்

சிபிஐ பா.ஜனதாவின் தேர்தல் ஏஜெண்டாக பயன்படுத்தப்படுகிறது -அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு + "||" + CBI being used as election agent by BJP Akhilesh

சிபிஐ பா.ஜனதாவின் தேர்தல் ஏஜெண்டாக பயன்படுத்தப்படுகிறது -அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

சிபிஐ பா.ஜனதாவின் தேர்தல் ஏஜெண்டாக பயன்படுத்தப்படுகிறது -அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
சிபிஐ பா.ஜனதாவின் தேர்தல் ஏஜெண்டாக பயன்படுத்தப்படுகிறது என அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
லக்னோ, 

2019 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் ஆட்சியின்போது நடந்த சுரங்க மோசடி மற்றும் மாயாவதியின் ஆட்சியின் போது  நினைவு மண்டபங்கள் அமைக்கப்பட்டதில் ஊழல் நடந்தது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிரடி சோதனை நடத்தியது. இதேபோன்று மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி விசாரணையும் இப்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்நிலையில் சிபிஐ பா.ஜனதாவின் தேர்தல் ஏஜெண்டாக பயன்படுத்தப்படுகிறது என அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

சிபிஐக்கு எதிராக மம்தா பானர்ஜி போராட்டம் மேற்கொண்டுள்ளது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இவ்விவகாரத்தில் மம்தா பானர்ஜிக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “எப்படியாவது ஆட்சியிலிருக்க வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது. பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என அச்சம் கொண்டுளனர். எனவே அவர்கள் சிபிஐயை அரசியல் ஏஜெண்டாக பயன்படுத்துகிறார்கள். அரசியலுக்காக சிபிஐ அமைப்பை பயன்படுத்தக்கூடாது” என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. லடாக் பகுதியை பழங்குடியினர் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் பா.ஜனதா எம்.பி. கோரிக்கை
லடாக் பகுதியை பழங்குடியினர் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என லடாக் தொகுதி பா.ஜனதா எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் கோரிக்கை விடுத்துள்ளார்.
2. வெறும் அரசியல் மட்டுமே பா.ஜனதா அரசின் திட்டம் - மம்தா பானர்ஜி
வெறும் அரசியல் மட்டுமே பா.ஜனதா அரசின் திட்டம் என மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
3. உன்னோவ் பலாத்காரம்: பாதிக்கப்பட்டவர், சாட்சிகளின் அடையாளத்தை வெளிப்படுத்த மீடியாக்களுக்கு நீதிமன்றம் தடை
உன்னோவ் பாலியல் பலாத்காரம் வழக்கில் பாதிக்கப்பட்டவர், சாட்சிகளின் அடையாளத்தை வெளியிட மீடியாக்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
4. பா.ஜனதா எம்.எல்.ஏ.வால் பலாத்காரம் செய்யப்பட்டு விபத்தில் சிக்கிய பெண் உயிருக்கு போராட்டம் - எய்ம்ஸ்
உன்னோவில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, விபத்துக்குள் சிக்கிய பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
5. திரிபுராவில் பா.ஜனதா அமோக வெற்றி - வாக்காளர்களுக்கு மோடி நன்றி
திரிபுராவில் பா.ஜனதா அமோக வெற்றிபெற்றதை தொடர்ந்து, வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.