சோமாலியா: 40 அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை


சோமாலியா: 40 அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
x
தினத்தந்தி 5 Feb 2019 11:02 PM IST (Updated: 5 Feb 2019 11:02 PM IST)
t-max-icont-min-icon

சோமாலியாவில் 40 அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மொகதீசு,

சோமாலியாவில் லோவர் ஷாபெல்லே பகுதியில், 40 அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல்-ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டும், வன்முறை தாக்குதல்களை நடத்தியும் பலரை கொன்று வருகின்றனர்.

இந்நிலையில் தெற்கு சோமாலியாவில் உள்ள லோவர் ஷாபெல்லே பகுதியில், பார்சோலே கிராமத்தில் அல்-ஷபாப் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது 40 அல்- ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் தேசிய நுண்ணறிவு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

முன்னதாக அல்-ஷபாப் இயக்கத்தினர் திங்களன்று சோமாலியாவின் தலைநகரான மொகாதீசுவில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் நடத்திய கார் குண்டுத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒன்பது பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story