மாநில செய்திகள்

தமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை : அமைச்சர் தங்கமணி பேட்டி + "||" + There is no possibility of power cut in summer in Tamil Nadu: Minister Thangmani interviewed

தமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை : அமைச்சர் தங்கமணி பேட்டி

தமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை : அமைச்சர் தங்கமணி பேட்டி
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை என அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவியை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

அ.தி.மு.க.வில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டணி குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வார்கள். தமிழகத்தில் இந்த ஆண்டு தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி இருப்பதால், வருகிற கோடை காலத்தில் மட்டும் இன்றி எப்போதுமே மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வரை வேலை வேண்டும் என்பதற்காக கிராம சபை கூட்டங்கள் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தேர்தலுக்கு பிறகு தான் மக்களின் செல்வாக்கு யாருக்கு இருக் கிறது என்பது தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல்-திருச்சி இடையே ரூ.2 ஆயிரம் கோடியில் 4 வழிச்சாலை அமைக்கப்படும் - தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் தங்கமணி தகவல்
நாமக்கல்-திருச்சி இடையே சுமார் ரூ.2 ஆயிரம் கோடியில் 4 வழிச்சாலை அமைக்கப்படும் என நாமக்கல்லில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி கூறினார்.
2. அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் அமைச்சர் தங்கமணி தகவல்
அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.
3. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு தாசில்தார் எவரும் எனது வீட்டிற்கு வரவில்லை - அமைச்சர் தங்கமணி பேட்டி
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபிறகு தாசில்தார் எவரும் எனது வீட்டிற்கு வரவில்லை என அமைச்சர் தங்கமணி கூறினார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
4. திருச்செங்கோடு பகுதி முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனுக்கு அமைச்சர் தங்கமணி வாக்கு சேகரித்தார்
திருச்செங்கோடு பகுதி முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனுக்கு ஆதரவாக அமைச்சர் தங்கமணி வாக்கு சேகரித்தார்.
5. படவீடு பேரூராட்சியில் 62 பேருக்கு முதியோர் உதவித்தொகை அமைச்சர் தங்கமணி வழங்கினார்
படவீடு பேரூராட்சியில் 62 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும் உத்தரவை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.