தேசிய செய்திகள்

நிதின் கட்கரி அற்புதமான பணியை செய்தார் என சோனியாகாந்தி பாராட்டு + "||" + In Lok Sabha, Nitin Gadkari s Wonderful Work as Road Transport Minister Gets Desk Thumps from Sonia Gandhi

நிதின் கட்கரி அற்புதமான பணியை செய்தார் என சோனியாகாந்தி பாராட்டு

நிதின் கட்கரி அற்புதமான பணியை செய்தார் என சோனியாகாந்தி பாராட்டு
நிதின் கட்கரி அற்புதமான பணியை செய்துள்ளார் என்று சோனியாகாந்தி பாராட்டினார், காங்கிரஸ் எம்.பி.க்களும் வரவேற்றனர்.
புதுடெல்லி,

பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தரப்பில் முன்னெடுக்கப்பட்ட பணிகள் மற்றும் இப்போது செய்யப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக விளக்கமான பதில் அளிக்கப்பட்டது. “எல்லா எம்.பி.க்களின் தொகுதிகளிலும் என்னுடைய அமைச்சகம் சிறப்பான பணியை செய்துள்ளது என்று அனைத்து எம்.பி.க்களும் கட்சி எல்லையைத்தாண்டி பாராட்டியுள்ளனர்,” என்றார் நிதின் கட்கரி.

பா.ஜனதா உறுப்பினர்கள் மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்ததற்கு மத்தியில் கட்கரி பேச்சை முடித்தார். அப்போது மத்திய பிரதேச மாநில எம்.பி. கணேஷ் சிங் எழுந்து நின்று, நிதின் கட்கரியின் அமைச்சகம் மேற்கொண்டுள்ள அற்புதமான பணிக்கு அவையில் பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனை மிகவும் கவனமாக கேட்டுக்கொண்டு இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மேஜையை தட்டி வரவேற்றார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர்களும் பாராட்டை தெரிவிக்கும் வகையில் மேஜையை தட்டினர். 

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி சோனியா காந்தியின் தொகுதியாகும். அவருடைய தொகுதியில் மேற்கொண்ட சாலை பணிகளுக்கு நன்றி தெரிவித்து சோனியா காந்தி ஆகஸ்ட் மாதம் நிதின் கட்கரிக்கு நன்றி கடிதம் எழுதியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் படுகொலை: நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்: ராகுல் காந்தி
இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓயமாட்டோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2. புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நாட்டிற்கு விடுக்கப்பட்ட சவால் - நிதின் கட்கரி
புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நாட்டிற்கு விடுக்கப்பட்ட சவால் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
3. 75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு
75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது என ராபர்ட் வதேரா குற்றம்சாட்டியுள்ளார்.
4. ஏம்பலம் அருகே காங்கிரஸ் பிரமுகர் வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு 8 பேரிடம் விசாரணை
ஏம்பலம் அருகே காங்கிரஸ் பிரமுகர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் அவருடைய தாய் காயமடைந்தார். இது தொடர்பாக 8 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
5. காங்கேயம் அருகே தொட்டிக்கரி தொழிற்சாலை தொடங்கும் பணியை நிறுத்தவேண்டும் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
காங்கேயம் அருகே தொட்டிக்கரி தொழிற்சாலை தொடங்கும் பணியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.