தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 450 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள் -ராணுவம் + "||" + Around 450 terrorists operating in JK Army

ஜம்மு காஷ்மீரில் 450 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள் -ராணுவம்

ஜம்மு காஷ்மீரில் 450 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள் -ராணுவம்
ஜம்மு காஷ்மீரில் 450 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாம்பூர்,

வடக்கு ராணுவ கமாண்டர் லெப்டிணன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 350 முதல் 400 வரையிலான பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். ஜம்மு பிராந்தியத்தில் 50 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். பாதுகாப்பு நிலவரம் ஸ்திரமாக உள்ளது. காஷ்மீர் பகுதியில்  பயங்கரவாதிகளின் செயல்பாடு அதிகமாக இருப்பதால் அங்கு ஆபரேஷன்கள் அவசியமானது,” என கூறியுள்ளார். 

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத கட்டமைப்புகள் செயல்பட்டு வருகிறது. எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை ஊடுருவச்செய்ய பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்து வருகிறது.

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி வழங்கப்படுகிறது. அவர்கள் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதிக்கு கொண்டு வரப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் காஷ்மீருக்குள் ஊடுருவ செய்யப்படுகிறார்கள். நாங்கள் அவர்களுடைய செயல்பாட்டை கண்காணிக்கிறோம் என தெரிவித்துள்ளார் ரன்பீர் சிங். 

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு: 30-க்கும் மேற்பட்ட கடைகள் மண்ணில் புதைந்தன
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள பதர்வா பகுதியில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது.
2. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அகமது கானை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி அகமது கானை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது என தகவல் வெளியாகியுள்ளது.
3. ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்தியதாக வெளியான தகவலில் உண்மையில்லை: பாதுகாப்புத்துறை
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்தியதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.
4. சிறுவனுக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்து குண்டை வீச செய்த பயங்கரவாத இயக்கம்
சிறுவனுக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்து ஜம்மு பஸ் நிலையத்தில் வெடிகுண்டை பயங்கரவாத இயக்கம் வீச செய்துள்ளது.
5. ஜம்முவில் கையெறி குண்டு வீச்சு: பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு
ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டு வீசப்பட்டதில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.