மாநில செய்திகள்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அதிநவீன இதய சிகிச்சை + "||" + Chennai Apollo Hospital For those over 80 years of age Heart Treatment

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அதிநவீன இதய சிகிச்சை

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அதிநவீன இதய சிகிச்சை
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அதிநவீன இதய சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
சென்னை,

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், 80 வயதுக்கும் மேற்பட்ட அதிக அபாயக்கட்டத்தில் இருந்த 4 இதய நோயாளிகளுக்கு மிக குறைவாக ஊடுருவும் மருத்துவ நடைமுறைகளை பயன்படுத்தி, இதய நோய் நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் குழுவினர் வெற்றிகரமாக நவீன சிகிச்சை செய்து முடித்தனர்.


இதுகுறித்து டாக்டர் சாய்சதீஷ் சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

இதய வால்வு தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு இல்லாத 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு ‘குறைந்த அளவு ஊடுருவச்ல்’ மருத்துவ சிகிச்சை. இது வழக்கமான திறந்த இதய அறுவை சிகிச்சை அல்ல. மிகவும் சிக்கலான இதய நோய்களுக்கு நவீன முறையில் சிகிச்சை அளிக்கிறோம். இதனால் நோயாளிகளின் இதயம் மீண்டும் வெகு சீக்கிரமே வழக்கம் போல் செயல்பட தொடங்கும்.

சமீபகாலமாக இந்த பிரச்சினைக்கு திறந்த இதய அறுவை சிகிச்சையே தீர்வாக இருந்தது. ஆனால் தற்போது நோயாளிகளின் உடலில் குறைந்த அளவு ஊடுருவும் மற்றும் பாதிப்புகள் அதிகம் இல்லாத மருத்துவ நடைமுறை ஒரு மிகப்பெரிய வரபிரசாதம் ஆகும். இது அறுவை சிகிச்சைக்கு மிகச்சரியான மாற்றாக அமைந்துள்ளது.

‘மிட்ரகேப்’ என்பது மிக நவீன மற்றும் புதுமையான மருத்துவ சிகிச்சை. இதயத்தில் பாதிப்பு அதிகம் ஏற்படும் போது உடலில் மிக குறைந்த அளவு ஊடுருவும் ‘மிட்ரகிளிப்’ நவீன சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியும். இந்த முறையில் சிகிச்சை பெற்றவர்கள், விரைவாக குணமடைந்து வழக்கமான வாழ்க்கைக்கு விரைவில் திரும்பிவிட முடியும். ஒரு சில நோயாளிகள் 2 நாட்களிலேயே வழக்கமான வாழ்க்கையை தொடங்கி விடுகிறார்கள். அவர்களுடைய இதயம் ஒரு ஆண்டில் மிகவும் வலுவாகி விடும். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையை சேர்ந்த சாரதாம்பாள்(வயது86), ரங்கசாமி(80), பாபு பாய் சஜ்தேவ்(89), கோபால் தாஸ்(83) ஆகியோருக்கு குறைந்த அளவு ஊடுருவும் நவீன சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் நிருபர்களிடம் கூறும்போது ‘இதய நோய்க்கு குறைந்த அளவு ஊடுருவும் நவீன சிகிச்சை பெற்று தற்போது ஆரோக்கியமாக இருக்கிறோம். எங்களுக்கு மறுவாழ்வு கிடைத்து இருப்பதாக உணர்கிறோம். நாங்கள் கண்டிப்பாக நூறு வயதை தாண்டி ஆரோக்கியமாக வாழ்வோம். வாழ்க்கையில் புதிய நம்பிக்கை எங்களுக்கு உருவாகி உள்ளது என்றனர்.

சாரதாம்பாள் கூறுகையில், ‘இதய நோய் காரணமாக படுக்கையில் இருந்த எனக்கு நவீன சிகிச்சை அளிக்கப்பட்டதன் மூலம் தற்போது பேட்மிண்டன் விளையாடும் அளவுக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை, புறநகர் பகுதிகளில் பலத்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது. தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வரும் சென்னைவாசிகளுக்கு இந்த மழை சற்று ஆறுதலை தந்துள்ளது.
2. சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்ட மேல்முறையீட்டு வழக்கு: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டை இன்று (செவ்வாய்க்கிழமை) பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
3. கடத்தப்பட்ட சிறுமி 8 மணி நேரத்தில் மீட்பு: சென்னை பாதுகாப்பான நகரம் என்பது நிரூபணமாகியுள்ளது போலீஸ் கமிஷனர் பெருமிதம்
கடத்தப்பட்ட சிறுமி 8 மணி நேரத்தில் சென்னையில் மீட்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னை பாதுகாப்பான நகரம் என்பது நிரூபணமாகியுள்ளது என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பெருமிதத்துடன் கூறினார்.
4. சென்னை ‘சாப்ட்வேர்’ என்ஜினீயர் கடத்தி கொலை தண்டவாளத்தில் உடல் வீச்சு
சென்னை ‘சாப்ட்வேர்’ என்ஜினீயரை கடத்தி கொடூரமாக கொலை செய்து, அவரது உடலை மர்ம நபர்கள் ரெயில் தண்டவாளத்தில் வீசி சென்றனர்.
5. சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளின் செல்போன்களை திருடி விற்ற 2 பேர் கைது
சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன்களை திருடி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 54 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.