தேசிய செய்திகள்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணா விரத போராட்டம் + "||" + Chandrababu Naidu To Fast Again To Demand Special Status For Andhra Pradesh

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணா விரத போராட்டம்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணா விரத போராட்டம்
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
புதுடெல்லி,

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை நிறைவேற்றாததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அவர், சிறப்பு அந்தஸ்து கேட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இதன் அடுத்தகட்டமாக டெல்லியில் அவர் இன்று (திங்கட்கிழமை) உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். இதன்படி, டெல்லியில் உள்ள  ஆந்திர பவனில் காலை 8 மணியளவில் உண்ணா விரத போராட்டத்தை துவங்கினார். இரவு 8 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில்  சந்திரபாபு நாயுடு மரியாதை செலுத்தினார். 

‘தர்ம போராட்ட தீக்‌ஷா’ என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மாநில மந்திரிகள் மற்றும் தெலுங்குதேச எம்.எல்.ஏ., எம்.பி.க்களும் பங்கேற்றுள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை சந்திரபாபு நாயுடு முடித்தார்
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை சந்திரபாபு நாயுடு முடித்துக்கொண்டார்.
2. மோடி அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு
மோடி அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தில் பங்குபெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.
3. இனிமேல் சந்திரபாபு நாயுடுவுக்கு எங்கள் கூட்டணி கதவு ஒருபோதும் திறக்காது - அமித்ஷா
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு சந்திரபாபுவுக்கு இனி திறக்காது என அமித் ஷா கூறியுள்ளார்.
4. ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவோம் என மத்திய அரசு மிரட்டுகிறது: சந்திரபாபு நாயுடு
ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவோம் என மத்திய அரசு மிரட்டுகிறது என்று ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
5. சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் -சந்திரபாபு நாயுடு
சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் உள்ளது என சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...