தேசிய செய்திகள்

ஆந்திராவின் சுயமரியாதை மீது தாக்குதல் நடத்தினால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்: சந்திரபாபு நாயுடு ஆவேசம் + "||" + Andhra Pradesh CM and Telugu Desam Party chief N Chandrababu Naidu

ஆந்திராவின் சுயமரியாதை மீது தாக்குதல் நடத்தினால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்: சந்திரபாபு நாயுடு ஆவேசம்

ஆந்திராவின் சுயமரியாதை மீது தாக்குதல் நடத்தினால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்: சந்திரபாபு நாயுடு ஆவேசம்
ஆந்திராவின் சுயமரியாதை மீது தாக்குதல் நடத்தினால் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
புதுடெல்லி,

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை நிறைவேற்றாததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அவர், சிறப்பு அந்தஸ்து கேட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

போராட்டத்தின் அடுத்த கட்ட வடிவமாக தலைநகர் டெல்லியில் உள்ள ஆந்திரபவனில் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தார். இதன்படி, இன்று காலை 8 மணி முதல் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

கருப்பு சட்டை அணிந்த படி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள சந்திரபாபு நாயுடு, போராட்டத்துக்கு இடையே பேசியதாவது:- “ எங்களின் கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி தரவில்லை என்றால், அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். 

இந்த விவகாரம் ஆந்திர மக்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது. எங்களின் சுயமரியாதை மீது தாக்குதல் நடத்தினால் அதை சகித்துக்கொள்ள மாட்டோம். தனிநபர் மீதான விமர்சனத்தை பிரதமர் மோடி உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
2. ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 12 பேர் பலி
ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 12 பேர் பலியாயினர்.
3. ஆந்திர கடற்பகுதியில் இலங்கை படகு கண்டுபிடிப்பு போலீஸ் தீவிர விசாரணை
ஆந்திர கடற்பகுதியில் இலங்கை படகு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து போலீஸ் தீவிர விசாரணையை மேர்கொள்கிறது.
4. மம்தா பானர்ஜியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு: தேர்தல் கருத்து கணிப்பு உறுதியானதல்ல என அறிவிப்பு
ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
5. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார்.