சினிமா செய்திகள்

ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமண விழா; எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து + "||" + Rajini's daughter Soundarya wedding ceremony; Edappadi Palaniasamy, Kamal Hassan congratulates

ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமண விழா; எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து

ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமண விழா; எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி கமல்ஹாசன் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்
சென்னை

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும் கோவை தொழிலபதிபர் விசாகனுக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டது.  சவுந்தர்யா-விசாகன் திருமணம் இன்று காலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

திருமணத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, தங்கமணி மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம் பிரபு, தனுஷ், ராம்குமார், கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் அனிருத், மு.க.அழகிரி, இயக்குநர் செல்வராகவன், லாரன்ஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்குமார், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, லக்‌ஷ்மி மஞ்சு, நடிகைகள் அதிதி ராவ் , ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியப் படங்களில் அதிகம் தடை செய்யப்பட்ட படங்களில் தமிழ்ப் படங்களுக்கு 2-வது இடம்
இந்தியப் படங்களில் மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவால் தடை செய்யப்பட்ட படங்களில் தமிழ்ப் படங்களுக்கு 2-வது இடம்.
2. பாகிஸ்தானை சேர்ந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு பாலிவுட் சினிமாவில் நடிக்க தடை
பாகிஸ்தானை சேர்ந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு அனைத்திந்திய திரைப்படப் பணியாளர்கள் சங்கம் தடைவிதித்துள்ளது.
3. ஸ்ரீதேவியின் நினைவு நிகழ்ச்சியில் அஜித், ஷாலினி பங்கேற்பு
மறைந்த ஸ்ரீதேவியின் நினைவு நாளையொட்டி, சென்னையில் வைத்து ஸ்ரீதேவிக்கு இன்று திதி அளிக்கப்பட்டது. இதில் நடிகர் அஜித், ஷாலினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
4. சாயிஷாவுக்கு காதல் தின வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா
நடிகை சாயிஷாவுடனான திருமணம் குறித்து காதலர் தினத்தன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் ஆர்யா!
5. என்னைப்போல் ஒருத்தி: நடிகை அனுஷ்கா சர்மா ஆச்சரியம்
நடிகை அனுஷ்கா ஷர்மாவின் தோற்றத்தை போன்று அச்சுஅசலாக அமெரிக்க பாடகி ஜூலியா மைக்கேல்ஸ் என்பவர் காட்சியளிப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...