தேசிய செய்திகள்

தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வு செய்ய வேண்டும் -சுப்ரீம் கோர்ட் உத்தரவு + "||" + Lok Ayukda team members in Tamil Nadu You have to choose within 8 weeks Supreme Court order

தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வு செய்ய வேண்டும் -சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்திற்குள்  தேர்வு செய்ய வேண்டும் -சுப்ரீம் கோர்ட் உத்தரவு
தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி

அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் ஊழலில் ஈடுபட்டால், அவர்களை விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் அனைத்து மாநில அரசுகளும் லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ வழிவகை செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு இதுவரை லோக் ஆயுக்தாவை அமைக்கவில்லை. இன்னும் தமிழகத்தில் லோக் ஆயுக்தா ஏன் அமைக்கவில்லை எனவும் சுப்ரீம் கோர்ட்  பலமுறை தமிழகத்துக்கு கண்டனம் தெரிவித்தது.

இது குறித்து தமிழக தலைமைச்செயலாளர் சுப்ரீம் கோர்ட்டில்  அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில் லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணி மட்டுமே தாமதமாகிக்கொண்டு இருக்கிறது. அந்த பணியும் விரைவில் முடிந்துவிடும். எனவே 8 வாரகாலம் அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்  தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்றும் அதற்கும் அடுத்த 4 வாரத்துக்குள் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: இன்று விசாரணை
பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதாக கூறி மாணவர்கள் தொடர்ந்த வழக்கை இன்று சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது.
2. சபாநாயகர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கோரி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு: இன்று விசாரணை
சபாநாயகர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
3. ரபேல் சீராய்வு மனு மீது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிய பிரமாண பத்திரம் தாக்கல்
ரபேல் சீராய்வு மனு மீது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உள்ளது. #Rafale | #SupremeCourt
4. தமிழகத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமன தடையை நீக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்துக்கு மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக்காலத் தடையை நீக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
5. தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார்: உஸ்தவ் பெய்ன்ஸ் என்ற வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் தொடர்பாக உஸ்தவ் பெய்ன்ஸ் என்ற வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.