தேசிய செய்திகள்

”நிதின் கட்காரி பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்துள்ளார்” காங்கிரஸ் டுவிட்டால் பரபரப்பு + "||" + "Nitin Gadkari's Direct Attack On PM," Tweets Congress Over New Remarks

”நிதின் கட்காரி பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்துள்ளார்” காங்கிரஸ் டுவிட்டால் பரபரப்பு

”நிதின் கட்காரி பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்துள்ளார்”  காங்கிரஸ் டுவிட்டால் பரபரப்பு
நிதின் கட்காரி பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்துள்ளார் என்று மத்திய பிரதேச காங்கிரஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

மராட்டிய  மாநிலம் புனேவில் நேற்று  பிம்ப்ரி சின்ச்வாட் என்ற இடத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, "எங்களுக்கு சாதியின் மீது நம்பிக்கை இல்லை. உங்கள் ஊரில் எத்தனை சாதிகள் இருக்கின்றன என்று எனக்குத் தெரியாது. ஏனெனில் என்னிடம் சாதி பற்றி பேசுபவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்று நான் சொல்லியிருக்கிறேன்.

சாதியின் அடிப்படையில் பாகுபாடு இருக்கக்கூடாது. இந்த சமூகத்தை சாதி, மதவாதமற்ற சமூகமாக உருவாக்க வேண்டும். ஏழை பணக்காரர் என்ற பாகுபாடும், உயர் சாதி தாழ்ந்த சாதி என்ற பிரிவினைவாதமும் சமூகத்தில் இருக்கக்கூடாது. ஏழைகளுக்கு தாராளமாக உதவுங்கள். ஏழைகளுக்கு உணவு, உடை, உறைவிடம் தர வேண்டும். ஏழைகளுக்கு உதவுவது இறைவனுக்கு சேவை செய்வதற்குச் சமம்" எனப் பேசினார்.

நிதின் கட்காரியின் இந்த பேச்சை மேற்கோள் காட்டியுள்ள மத்திய பிரதேச காங்கிரஸ், நிதின் கட்காரி பிரதமர் மோடி மற்றும் அவரது கட்சியைத்தான் விமர்சித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய பிரதேச காங்கிரஸ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, ”நிதின் கட்காரி மீண்டும் மோடியையும்,  பாஜகவையும் நேரடியாக விமர்சித்துள்ளார். பாஜக பின்பற்றும்  சாதி அரசியலுக்கு எதிராக கட்காரி பேசியுள்ளார். ஹனுமன் பெயரை பயன்படுத்தி சமீபத்தில் ஓட்டு கேட்டவர்களை எப்போது தாக்க போகிறீர்கள்?” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சமீபத்தில், கடவுள் ஹனுமன் தலித் சமூகத்தைச்சேர்ந்தவர் எனவும்  மனுவாதிகளுக்கு அடிமையாக இருந்தார் எனவும் பாஜக எம்.பி சாவித்ரி பாய் புலே கூறியிருந்தது கடும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இவரை தவிர பாஜகவின் உள்ளூர் தலைவர்கள் பலரும் இதே போன்ற கருத்தை கூறியதை வைத்து காங்கிரஸ் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. 3 கிலோ மாட்டிறைச்சியை தேடி கண்டுபிடித்த மோடியால் 350 கிலோ வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை - காங்கிரஸ்
3 கிலோ மாட்டிறைச்சியை தேடி கண்டுபிடித்த மோடியால் 350 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை என புல்வாமா தாக்குதல் குறித்து காங்கிரஸ் மோடியை குற்றஞ்சாட்டி உள்ளது.
2. ஈரோட்டில் பட்டப்பகலில் துணிகரம் கள்ளச்சாவி போட்டு காங்கிரஸ் நிர்வாகியின் மோட்டார்சைக்கிள் திருட்டு
ஈரோட்டில் பட்டப்பகலில் கள்ளச்சாவி போட்டு காங்கிரஸ் நிர்வாகியின் மோட்டார் சைக்கிளை 3 வாலிபர்கள் திருடியது கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
3. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை
காங்கேயம் அருகே கவனிக்க யாரும் இல்லாததால் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். இதில் படுகாயத்துடன் தப்பிய அவர்களது பேரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4. காஷ்மீர் தாக்குதல்: பாதுகாப்பில் மிகப்பெரும் குளறுபடி- காங்கிரஸ் குற்றச்சாட்டு
புல்வாமா தாக்குதல் குறித்து மத்திய அரசை விமர்சிக்காமல் இருந்த பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், இன்று முதல் முறையாக விமர்சித்துள்ளது.
5. புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: காங்கிரஸ்
புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...