தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தி-பிரியங்கா காந்தி ஊர்வலம் தொண்டர்கள் உற்சாகம் + "||" + Rahul, Priyanka, Scindia begin ‘Mission UP’ roadshow in Lucknow

உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தி-பிரியங்கா காந்தி ஊர்வலம் தொண்டர்கள் உற்சாகம்

உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தி-பிரியங்கா காந்தி ஊர்வலம் தொண்டர்கள் உற்சாகம்
உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஊர்வலமாக கட்சி அலுவலகம் சென்றனர். தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
லக்னோ,

காங்கிரஸ் கட்சியில், உத்தரபிரதேச கிழக்கு பகுதி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின், பிரியங்கா முதல் முறையாக லக்னோ  சென்றார்.  நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் வழி நெடுகிலும் கூடி நின்று பிரியங்காவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு பிராந்திய பொதுச்செயலர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோரும் அவருடன் இன்று சென்றனர். 3 பேரையும் விமான நிலையத்தில் இருந்து தலைமை அலுவலகம் வரை சாலை வழியாக ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். தொண்டர்களை நோக்கி கை அசைத்தபடி வந்த ராகுல், திடீரென ரபேல் போர் விமான படத்தை எடுத்து தொண்டர்களிடம் காட்டியதும், அவர்கள் ஆரவாரம் செய்தனர்.  வரும் 14-ம் தேதி வரை, உத்தரபிரதேசத்தில் தங்கி  இருக்கும் பிரியங்கா, அங்குள்ள 42 நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளா​ர்.

தொடர்புடைய செய்திகள்

1. மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம், பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் - பிரியங்கா காந்தி
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம், பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
2. கருத்துக் கணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்
கருத்துக் கணிப்பால் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று பிரியங்கா காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
3. பா.ஜனதா ஆட்சியிலிருந்து சென்றுவிடும் என்பது தெளிவாக தெரிகிறது - பிரியங்கா காந்தி
பா.ஜனதா ஆட்சியிலிருந்து சென்றுவிடும் என்பது தெளிவாக தெரிகிறது என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
4. அகங்காரம் தான் துரியோதனனின் அழிவுக்கு காரணம் மோடிக்கு பிரியங்கா காந்தி எச்சரிக்கை
அகங்காரம்தான் துரியோதனனின் அழிவுக்கு காரணம் என பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
5. பிரதமர் மோடி - பிரியங்கா மோதல் நடக்காதது ஏன்? ராகுல் காந்தி
வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியிடாததற்கு ராகுல் காந்தி விளக்கம் கொடுத்துள்ளார்.