தேசிய செய்திகள்

பெண் கலெக்டரை மூளை இல்லாதவர் என திட்டிய எம்.எல்.ஏ. + "||" + Kerala: CPM MLA S Rajendran regrets abusive remarks against woman IAS officer

பெண் கலெக்டரை மூளை இல்லாதவர் என திட்டிய எம்.எல்.ஏ.

பெண் கலெக்டரை மூளை இல்லாதவர் என திட்டிய எம்.எல்.ஏ.
தனக்கு நோட்டீஸ் அனுப்பிய பெண் கலெக்டரை மூளை இல்லாதவர் என எம்எல்ஏ ஒருவர் திட்டி உள்ளார்.
இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சப்-கலெக்டராக இருப்பவர் ரேணு ராஜ் (30). இப்பகுதியின் முதல் பெண் சப்-கலெக்டர் இவர். கோர்ட் உத்தரவை மீறி தேவிக்குளம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏ ராஜேந்திரன், கட்டிடம் ஒன்றை கட்டி வருகிறார். இந்த பணிகளை நிறுத்தும்படி, ரேணு ராஜ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இது குறித்து ரேணு ராஜூடன் பொதுமக்கள் முன்னிலையில் ராஜேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு கூடி இருந்தவர்களிடம் பேசிய ராஜேந்திரன், அரசு சார்பில் என்னிடம் விளக்கம் கேட்பது இது தான் முதல் முறை. கட்டிட விதிமுறைகளை வகுக்க வேண்டியது பஞ்சாயத்து தான். இவர் இல்லை. விதிகள் பற்றி இன்னும் இவர் படிக்க வேண்டும். இவர் போன்றோரை நான் இதுவரை பார்த்ததில்லை. இது போன்று மூளை இல்லாதவர்களை இங்கு பணியமர்த்தி உள்ளனர் என்றார்.

எம்எல்ஏவின் இந்த கருத்து பற்றிய கேள்விக்கு பதிலளித்த ரேணு ராஜ், கோர்ட் உத்தரவின்படியே நான் நடவடிக்கை எடுத்தேன். அனுமதியில்லாமல் கட்டிடம் கட்டுவது கோர்ட் அவமதிப்பு. இது தொடர்பாக தலைமை செயலாளர் மற்றும் வருவாய்த்துறை செயலாளருக்கு அறிக்கை அனுப்பி விட்டேன். எனது கடமையை தொடர்ந்து செய்வேன். அவர்கள் எந்த நடவடிக்கை எடுத்தாலும் எனக்கு கவலையில்லை என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் உள்ள 44 ஆறுகளில் 1000 டிஎம்சிக்கு அதிகமான தண்ணீர் வீணாகிறது - கேரள அமைச்சர்
கேரளாவில் உள்ள 44 ஆறுகளில் 1000 டிஎம்சிக்கு அதிகமான தண்ணீர் வீணாகிறது என கேரள அமைச்சர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.
2. கணவனின் வக்கிர ஆசை: பாதிக்கப்பட்ட மனைவி புகாரால் 4 பேர் கைது
கணவனின் வக்கிர ஆசையால் பாதிக்கப்பட்ட மனைவி கொடுத்த புகாரின் பேரில் கணவனின் நண்பர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. 9 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக 36 வயது பெண் மீது வழக்கு
9 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக 36 வயது உறவுக்கார பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.