மாநில செய்திகள்

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை; மத்திய அரசிடம் அசைந்து கொடுத்ததில்லை-ஓ.பன்னீர் செல்வம் + "||" + The funds to be given to Tamil Nadu   Does not provide a formal basis;The central government has not mobilized  O. PANNER selavam

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை; மத்திய அரசிடம் அசைந்து கொடுத்ததில்லை-ஓ.பன்னீர் செல்வம்

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை; மத்திய அரசிடம் அசைந்து கொடுத்ததில்லை-ஓ.பன்னீர் செல்வம்
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை, இருந்தாலும் மத்திய அரசிடம் நாங்கள் அசைந்து கொடுத்ததில்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் செங்குட்டுவன், பிரதமரிடம் அதிமுக இணக்கமாக உள்ள நிலையில் மாநிலத்திற்கு தேவையான நிதியை கேட்டுப்பெற தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். 

அப்போது குறுக்கிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை என்றாலும், மாநில அரசின் நியாயத்தை மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தும் அதேநேரத்தில் எதற்கும் நாங்கள் அசைந்து கொடுத்ததில்லை.

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் 52 சதவீதம் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு செலவு செய்யப்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என பலமுறை பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியும் எந்த பலனும் இல்லை.

இதுவரையில் தாம் தாக்கல் செய்தவற்றிலேயே தற்போது தாக்கல் செய்ததுதான் மிகச் சிறந்த பட்ஜெட் என்றும் சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இறுதி துணை நிதிநிலை அறிக்கை : ரூ.17,714 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
இறுதி துணை நிதிநிலை அறிக்கைக்காக 17 ஆயிரத்து 714 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2. பொங்கல் பரிசு கணக்கில் தவறு : சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
பொங்கல் பரிசு வழங்கியது தொடர்பாக துணை முதல்வர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால், திமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
3. தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் - சட்ட மசோதா தாக்கல்
தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
4. சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வேலுமணி
சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.158 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மு.க. ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் வேலுமணி பதில் அளித்தார்.
5. கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்
கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் இன்று சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது.