தேசிய செய்திகள்

முல்லைப்பெரியாறில் அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை சுப்ரீம் கோர்ட்டில் கேரளா பதில் + "||" + Kerala responds to the Supreme Court not engaging in dam construction in Mullaperiyar

முல்லைப்பெரியாறில் அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை சுப்ரீம் கோர்ட்டில் கேரளா பதில்

முல்லைப்பெரியாறில் அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை சுப்ரீம் கோர்ட்டில் கேரளா பதில்
முல்லை பெரியாறு அணைப்பகுதியில் புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை என்று கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என தமிழகம் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், கேரள அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில்  முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை, மாற்று அணை அமைப்பதற்கான தகவல்களை திரட்டும் பணியில் மட்டுமே தற்போது ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவதூறு வழக்கில் கேரள அரசின் பதிலை ஏற்று திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்  அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை மதுரை பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
“முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்” என மதுரையில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.