தேசிய செய்திகள்

செல்பி மோகத்தால் மற்றொரு உயிரிழப்பு ரெயில் பெட்டி மீது ஏறிய சிறுவன் உயிரிழப்பு + "||" + MP teen electrocuted after climbing atop rail wagon for selfie

செல்பி மோகத்தால் மற்றொரு உயிரிழப்பு ரெயில் பெட்டி மீது ஏறிய சிறுவன் உயிரிழப்பு

செல்பி மோகத்தால் மற்றொரு உயிரிழப்பு ரெயில் பெட்டி மீது ஏறிய சிறுவன் உயிரிழப்பு
மத்திய பிரதேச மாநிலத்தில் செல்பி மோகத்தால் மற்றொரு உயிரிழப்பு நேரிட்டுள்ளது.
ஜாபுவா,

இளைஞர்கள் மத்தியில் செல்பி எடுத்துக்கொள்ளும் மோகம் அதிகரித்து காணப்படுகிறது. அவர்கள், விபரீதமான செயல்களில் ஈடுபடும்போது அது உயிருக்கே உலை வைக்கிறது. இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இதனால் உயிரிழப்பு அதிகரித்துதான் காணப்படுகிறது. எத்தனை எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் பலனளிப்பதாக தெரியவில்லை. இப்போது மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுவன் ஒருவன் செல்பி மோகம் காரணமாக ரெயில் பெட்டியின் மீது ஏறியுள்ளான், அப்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தான் என ரெயில்வே பாதுகாப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜாபுவா மாவட்டம் பெருகார்க் ரெயில் நிலையத்தில் பங்கஜ் என்ற 16 வயது சிறுவன் ரெயில் பெட்டியின் மீது ஏறி செல்பி எடுக்க முயற்சி செய்தான் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். அப்போது அங்கு இருந்த உயர் மின் அழுத்த வயரை கவனிக்காமல் கை வைத்துவிட்டான். இதனால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற பெண் டாக்டர் பலி
கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற பெண் டாக்டரை ராட்சத அலை இழுத்து சென்றது அதில் அவர் பலியானார்.
2. ‘செல்பி’ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் போலீஸ்காரரின் தபால் ஓட்டு நிராகரிப்பு
‘செல்பி’ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால், போலீஸ்காரரின் தபால் ஓட்டு நிராகரிக்கப்பட்டது.
3. தண்டவாளத்தில் செல்பி எடுத்த 3 வாலிபர்கள் ஓடும் ரெயிலில் சிக்கி உயிரிழப்பு
அரியானாவில் தண்டவாளத்தில் செல்பி எடுத்த 3 வாலிபர்கள் ஓடும் ரெயிலில் சிக்கி உயிரிழந்த பயங்கர சம்பவம் நேரிட்டுள்ளது.
4. விமான நிலையம் முன் செல்ஃபி எடுத்தால் மரணதண்டனை: தாய்லாந்து அரசு
விமான நிலையம் அருகே செல்ஃபி எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
5. கருஞ்சிறுத்தையுடன் 'செல்பி' எடுக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்
கருஞ்சிறுத்தையுடன் 'செல்பி' எடுக்க முயன்ற பெண்ணை சிறுத்தை தாக்கியுள்ளது.