தேசிய செய்திகள்

டுவிட்டரில் பிரியங்கா காந்தி - 1 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் + "||" + Priyanka Gandhi in Twitter - 1 lakh followers

டுவிட்டரில் பிரியங்கா காந்தி - 1 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்

டுவிட்டரில் பிரியங்கா காந்தி - 1 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்
டுவிட்டரில் இணைந்துள்ள பிரியங்கா காந்தியை, 1 லட்சம் பேருக்கு மேல் பின் தொடர்கிறார்கள்.
புதுடெல்லி, 

காங்கிரஸ் பொது செயலாளராக பொறுப்பேற்ற பிரியங்கா காந்தி இன்று முதன் முறையாக டுவிட்டர் இணையதளத்தில் இணைந்தார். பிரியங்கா காந்தி டுவிட்டரில் இணைந்த 10 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரை பின் தொடர்கின்றனர்.

கடந்த ஜனவரி 23-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும், கிழக்கு உத்தர பிரதேசத்தின் பொறுப்பாளராகவும் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். தீவிர அரசியலில் இறங்கியுள்ள பிரியங்கா காந்தி, இன்று "மிஷன் உத்தர பிரதேசம்"  பிரசாரம் மூலம் நான்கு நாட்கள் உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் முகாமிட்டு அங்குள்ள முக்கிய தலைவர்களையும், மக்களையும் சந்தித்து வருகிறார். 

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஒன்றான டுவிட்டரில் இன்று இணைந்தார். கடந்த 10 மணி நேரத்தில் மட்டும் பிரியங்கா காந்தியை பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது. மேலும் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கூறுகையில், “தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டுவிட்டரில் இணைந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவரை பின் தொடர்ந்தனர். தற்போது அந்த வகையில் பிரியங்கா காந்தியும் சாதனை படைத்து உள்ளார். பிரியங்கா காந்தி தற்போது புதிய சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து வருகிறார்” என்று புகழாரம் சூட்டினார்.


தொடர்புடைய செய்திகள்

1. மக்களவைத் தேர்தலில் கட்சிக்காக உண்மையாக உழைக்காதவர்களை விரைவில் கண்டுபிடிப்பேன் -பிரியங்கா
மக்களவைத் தேர்தலில் கட்சிக்காக உண்மையாக உழைக்காதவர்களை விரைவில் கண்டுபிடிப்பேன் என பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.
2. ராகுல் காந்தியை சமாதானம் செய்ய பிரியங்கா காந்தி தீவிர முயற்சி
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் உறுதியாக இருக்கும் ராகுல் காந்தியை சமாதானம் செய்யும் முயற்சியில் பிரியங்கா காந்தி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
3. பிரதமர் மோடி உலகின் மிகப்பெரிய நடிகர் - பிரியங்கா காந்தி தாக்கு
பிரதமர் மோடி உலகின் மிகப்பெரிய நடிகர் என இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது பிரியங்கா காந்தி விமர்சனம் செய்தார்.
4. மோசமான தட்பவெப்ப நிலையால் பிரியங்கா காந்தியின் இமாசல பிரதேச பயணம் ரத்து
மோசமான தட்பவெப்ப நிலையால் பிரியங்கா காந்தியின் இமாசல பிரதேச பயணம் ரத்து செய்யப்பட்டது.
5. பிரதமர் மோடியை சிறார்கள் வசை பாடிய விவகாரம், பிரியங்கா காந்தி விளக்கம்
பிரதமர் மோடியை சிறார்கள் வசை பாடியதை பார்த்து பிரியங்கா வாயடைத்து நிற்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.