தேசிய செய்திகள்

குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஜூலையில் விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு தகவல் + "||" + Gujarat riots: The trial against PM Modi in July - Supreme Court Information

குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஜூலையில் விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு தகவல்

குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஜூலையில் விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு தகவல்
குஜராத் கலவரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஜூலையில் விசாரணைக்கு வர உள்ளது.

புதுடெல்லி, 

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது, ஆமதாபாத் குல்பர்க் சொசைட்டியில் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி உள்பட 68 பேர் கொல்லப்பட்டனர். இதை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், இதில் குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய முதல்-மந்திரி மோடி உள்ளிட்டோரை விடுவித்தது.

இதை எதிர்த்து இஷான் ஜாப்ரியின் மனைவி சகியா, குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த மனுவை ஐகோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் சகியா மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. நேற்று இந்த வழக்கு நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை ஜூலை மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வலிமையான எதிர்க்கட்சி இருப்பது ஜனநாயகத்திற்கு அவசியம் -பிரதமர் மோடி
வலிமையான எதிர்க்கட்சி இருப்பது ஜனநாயகத்திற்கு அவசியம். நாடாளுமன்றம் சுமுகமாக நடக்க ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
2. பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் சிவசேனா வலியுறுத்தல்
மத்தியில் பிரதமர் மோடி ஆட்சியில் அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
3. பிரதமர் மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறல் விவரங்களை வெளியிட முடியாது - தேர்தல் ஆணையம்
பிரதமர் மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறல் விவரங்களை வெளியிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
4. பாரதீய ஜனதா ஆட்சி நடக்காத மாநிலங்கள் மீது பிரதமர் மோடி மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பாரதீய ஜனதா ஆட்சி நடக்காத மாநிலங்கள் மீது பிரதமர் மோடி மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
5. குருவாயூர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்: எடைக்கு எடை தாமரை மலர்களை துலாபாரமாக வழங்கி வழிபாடு
பிரதமர் நரேந்திர மோடி குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். அங்கு துலாபாரம் நிகழ்ச்சியில் தனது எடைக்கு எடை தாமரை மலர்களை காணிக்கையாக வழங்கினார்.