தேசிய செய்திகள்

மாதாந்திர பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு - பாதுகாப்பு பணிகள் தீவிரம் + "||" + Open in Sabarimala for Monthly Pooja - Protective work is intensified

மாதாந்திர பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு - பாதுகாப்பு பணிகள் தீவிரம்

மாதாந்திர பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
மாதாந்திர பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறக்கப்படுகிறது. இதனால் அங்கு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு-மண்டல பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் நடை அடைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாதாந்திர பூஜைக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் நடை திறக்கப்படுகிறது. 17-ந்தேதி வரை நடைபெறும் இந்த சிறப்பு நிகழ்வில் களபாபிஷேகம், சகஸ்ரகலசம், லட்சார்ச்சனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெறுகிறது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து கடந்த செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, அங்கு நடை திறக்கப்படும் காலங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

எனவே இந்த போராட்டங்களை தடுக்கும் வகையில் தற்போது பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக நிலக்கல், சன்னிதானம், பம்பை போன்ற பகுதிகளில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதேநேரம் தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள் வந்தால் அவர்கள் தடுக்கப்படுவார்களா? என்பது குறித்து இந்து அமைப்புகள் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும் நடை திறப்பையொட்டி சபரிமலை வட்டாரத்தில் பதற்றம் நிலவி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. நாங்கள் ஆட்சிக்குவந்தால், பக்தர்களின் நம்பிக்கை பாதுகாக்கப்படும் - பிரதமர் மோடி
கேரளாவில் சபரிமலை மற்றும் அய்யப்பன் கோவிலை வைத்து பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
2. தடை செய்யப்பட்ட வயதுடைய 2 பெண்கள் மட்டுமே சபரிமலையில் தரிசனம் செய்தனர் - கேரள மந்திரியின் தகவலால் குழப்பம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், கடந்த மாதம் 2–ந் தேதி தடை செய்யப்பட்ட வயதுடைய 2 பெண்கள் தரிசனம் செய்தனர்.
3. 65 நாட்கள் பூஜைக்குப்பின் சபரிமலையில் நடை அடைக்கப்பட்டது
சபரிமலையில் சுமார் 65 நாட்கள் பூஜைக்குப்பின் நேற்று நடை அடைக்கப்பட்டது.
4. சபரிமலையின் புனிதம் காக்க அறவழி போராட்டங்கள் தொடரும் இந்து மக்கள் கட்சி தலைவர் பேட்டி
சபரிமலையின் புனிதம் காக்க அறவழி போராட்டங்கள் தொடரும் என்று இந்து மக்கள் கட்சியின்(தமிழகம்) மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் திருப்பூரில் கூறினார்.
5. சபரிமலை விவகாரம்: கேரள அரசை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.