தேசிய செய்திகள்

மறுவரையறை: தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + Redefined: Supreme Court directive to the National Minorities Commission

மறுவரையறை: தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மறுவரையறை: தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மறுவரையறை செய்யக்கோரி தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி, 

மாநில மக்கள்தொகை அடிப்படையில் ‘சிறுபான்மையினர்’ யார் என்பதை மறுவரையறை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து முடிவு எடுக்குமாறு தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

பா.ஜனதா பிரமுகரும், வக்கீலுமான அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது:-

தேசிய மக்கள்தொகை அடிப்படையில், தேசிய அளவில் ‘சிறுபான்மையினர்’ யார் யார் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தேசிய அளவில் பெரும்பான்மையினராக உள்ள இந்துக்கள், பல்வேறு வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீர் மாநிலத்திலும் சிறுபான்மையினராக உள்ளனர்.

ஆனால், சிறுபான்மையினருக்கான சலுகைகள், மேற்கண்ட மாநிலங்களில் இந்துக்களுக்கு அளிக்கப்படுவது இல்லை.

எனவே, தேசிய அளவில் சிறுபான்மையினர் யார் யார் என்று வரையறை செய்யாமல், ஒவ்வொரு மாநில அளவில், அந்தந்த மாநில மக்கள்தொகை அடிப்படையில், சிறுபான்மையினரை மறுவரையறை செய்ய வேண்டும். தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு இதுகுறித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திடம் மனுதாரர் தனியாக மனு சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவரது கோரிக்கை பற்றி 3 மாதங்களுக்குள் தேசிய சிறுபான்மையினர் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.