கிரிக்கெட்

கிரிக்கெட் சங்க தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் + "||" + Chairman of the Cricket Association On the former cricketer mysterious people attacked

கிரிக்கெட் சங்க தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

கிரிக்கெட் சங்க தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித் பண்டாரி அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன்ஸ் மைதானத்தில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளித்து கொண்டிருந்துள்ளார் அமித் பண்டாரி. அப்போது திடீரென அங்கு வந்த அடையாளம் தெரியாத சுமார் 15 பேர், அமித் பண்டாரியை சூழ்ந்து கொண்டு ஹாக்கி மட்டையாலும், இரும்பு கம்பிகளாலும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

அதன் பின்னர் அந்த நபர்கள் அவசர அவசரமாக அங்கிருந்து தலைமறைவாகியுள்ளனர். இந்த தாக்குதலில் தலையிலும், காது பகுதிகளிலும் பலத்த காயம் அடைந்த அமித் பண்டாரி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அமித் பண்டாரி தற்போது, மூத்த வீரர்களுக்கான டெல்லி மற்றும் மாநில கிரிக்கெட் சங்கத்தின் வாரியத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இதனால் அணியில் தேர்வு செய்யப்படாத ஏதேனும் ஒரு வீரர் பழிவாங்கும் முயற்சியாக இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி
பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
2. அதிக கேட்ச் விட்ட அணிகள் : பாகிஸ்தான் முதலிடத்திலும்... இந்தியா கடைசி இடத்திலும்...
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக கேட்ச் விட்ட அணிகள் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்திலும், இந்தியா கடைசி இடத்திலும் இருக்கிறது.
3. கிரிக்கெட் போட்டியில் புதிய வரலாறு : 6 ரன்களுக்கு ஆல் அவுட் ; 9 பேர் ரன் எடுக்காமல் அவுட்
இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் புதிய வரலாறாக வெறும் 6 ரன்களுக்கு மொத்த அணியும் அவுட்டான அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தேறி உள்ளது.
4. ஏழைக்குடும்பத்தில் பிறந்து சாதித்த ஷாகிப் அல் ஹசன்
ஏழைக்குடும்பத்தில் பிறந்து சாதித்த வங்காளதேச வீரர் ஷாகிப் அல் ஹசன்.
5. பாகிஸ்தான் தோல்விக்கு காரணம் என வெளியான வீடியோ : வெகுண்டெழுந்த சானியா மிர்சா
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு இது தான் காரணம் என புகைப்படம் ஒன்று வைரலாகி இருக்கிறது. இதற்கு சானியா மிர்சா பதிலடி கொடுத்து உள்ளார்.