தேசிய செய்திகள்

பிரதமர் நிகழ்ச்சியில் பெண் அமைச்சரின் இடுப்பில் கை வைத்த அமைச்சர் + "||" + Video of Tripura minister groping woman colleague on stage with PM Modi goes viral

பிரதமர் நிகழ்ச்சியில் பெண் அமைச்சரின் இடுப்பில் கை வைத்த அமைச்சர்

பிரதமர்  நிகழ்ச்சியில் பெண் அமைச்சரின் இடுப்பில் கை வைத்த அமைச்சர்
திரிபுராவில் பிரதமர் மோடி இருந்த மேடையில், மாநில அமைச்சர் ஒருவர் சக பெண் அமைச்சரின் இடுப்பை பிடித்து அநாகரிகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அகர்தலா,

திரிபுரா தலைநகர் அகர்தலாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் கர்ஜி-பிலோனியா இடையேயான ரெயில் தடத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதற்கான கல்வெட்டை அவர் திறந்து வைத்தபோது திரிபுரா ஆளுநர் கப்தான் சிங் சோலங்கி, முதலமைச்சர் பிப்லப் தேவ் உடனிருந்தனர்.

பிரதமருக்கு நேர் எதிர்வரிசையில் திரிபுரா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மனோஜ் காந்தி தேவ்,  சமூகநலத்துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் பெண் அமைச்சரும், பழங்குடியின இளம் தலைவருமான சாந்தனா சக்மா உள்ளிட்டோர் நின்றிருந்தனர். அப்போது அநாகரிகமான முறையில் மனோஜ் காந்தி தேவ், பெண் அமைச்சர் இடுப்பில் கை வைத்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அமைச்சர் மனோஜ் காந்தி தேவ்-ஐ, திரிபுரா அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சி வரிசையில் உள்ள இடதுசாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் பெண் அமைச்சர் இப்படி ஒரு புகாரே தெரிவிக்காத நிலையில், இடதுசாரிகள் தவறான விஷயத்தை பரப்புவதாகவும், இழிவான அரசியல் செய்வதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. புகாருக்கு உள்ளான அமைச்சர் மனோஜ் காந்தி தேவ் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. திரிபுரா மேற்கு தொகுதியில் 160 ஓட்டுச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது: 12-ந் தேதி மறுதேர்தலுக்கு உத்தரவு
திரிபுரா மேற்கு தொகுதியில் 160 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என்றும், 12-ந் தேதி மறுதேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
2. திரிபுரா: உள்ளாட்சி இடைத்தேர்தல் - பா.ஜனதா வெற்றி
திரிபுராவில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில், பா.ஜனதா அபார வெற்றிபெற்றது.