தேசிய செய்திகள்

ரபேல் ஒப்பந்தம்: இடைத்தரகர் போல் பிரதமர் செயல்பட்டு உள்ளார்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு + "||" + Rahul Gandhi: Narendra Modi ji is acting as the middleman of Anil Ambani.

ரபேல் ஒப்பந்தம்: இடைத்தரகர் போல் பிரதமர் செயல்பட்டு உள்ளார்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ரபேல் ஒப்பந்தம்:  இடைத்தரகர் போல் பிரதமர் செயல்பட்டு உள்ளார்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் இடைத்தரகர் போல் செயல்பட்டு உள்ளார் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். #RafaleDeal #RahulGandhi
புதுடெல்லி, 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்து  பேட்டி  அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர்  இடைத்தரகர் போல் செயல்பட்டு உள்ளார்.  அனில்  அம்பானி  நிறுவனம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போர் ஜெட் ஒப்பந்தத்தை பெற உதவுவதற்காக அனில் அம்பானியின்  இடைத்தரகராக பிரதமர் மோடி செயல்பட்டு உள்ளார். ஒப்பந்தம் இறுதியாகும் 10 நாட்கள் முன் பிரஞ்சு பாதுகாப்பு அமைச்சரை அனில் அம்பானி சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சக நடவடிக்கைகளை பிரதமர் அலுவலகம் உளவு பார்த்து உள்ளது. ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ரகசிய விதிமுறைகளை  மீறி உள்ளார். அவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர வேண்டும்  என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராகுல்காந்தி பிரதமர் ஆனதும் கவர்னர் கிரண்பெடி டிஸ்மிஸ் செய்யப்படுவார் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் பேட்டி
ராகுல்காந்தி பிரதமர் ஆனதும் கவர்னர் கிரண்பெடி டிஸ்மிஸ் செய்யப்படுவார் என்று காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் கூறினார்.
2. பாஜகவுடன் வெறுப்புடன் போராட மாட்டோம் ; மோடியை கட்டி அணைத்தது அவரிடம் இருந்த வெறுப்பை அகற்றத்தான் - ராகுல்காந்தி
நாங்கள் பாஜகவுடன் வெறுப்புடன் போராட மாட்டோம். மோடியை கட்டி அணைத்தது அவரிடம் இருந்த வெறுப்பை அகற்றத்தான் என ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார்.
3. ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு கூறிய அனைத்தும் பொய் என்பது நிரூபணம் -காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி
ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு கூறிய அனைத்தும் பொய் என்பது நிரூபணமாகி உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார்.
4. ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை: எதிர்க்கட்சிகளின் பொய் அம்பலமாகி உள்ளது -அருண்ஜெட்லி
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை மூலம், எதிர்க்கட்சிகளின் பொய் அம்பலமாகி இருப்பதாக மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
5. மோடி அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு
மோடி அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தில் பங்குபெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.