மாநில செய்திகள்

பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது- எல்.கே.சுதீஷ் + "||" + Including Bharatiya Janata Party With all parties coalition is negotiated LK suthish

பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது- எல்.கே.சுதீஷ்

பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது- எல்.கே.சுதீஷ்
பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.
சென்னை,

சென்னையில் தே.மு.தி.க. கொடிநாள் கொண்டாட்டம் கட்சியின் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.  தே.மு.தி.க. மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"பிப்ரவரி மாத இறுதிக்குள் தே.மு.தி.க. கூட்டணி இறுதி செய்யப்படும். பா.ஜ.க. உட்பட அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி தொடர்பாக பேசி வருகிறோம்.

அமெரிக்காவில் சிகிச்சையில் உள்ள விஜயகாந்த் 2 வாரத்தில் நாடு திரும்ப உள்ளார். அதன் பிறகு கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்" என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அதிமுக கூட்டணியில் தேமுதிக சேர ஏன் இழுபறி? முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை
அதிமுக கூட்டணியில் தேமுதிக 10 தொகுதிகளை கேட்பதால் இழுபறி ஏற்பட்டு உள்ளது கூட்டணி தொடர்பாக தேமுதிக முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
2. அதிமுக- பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்புகள் உள்ளன: பொன்.ராதாகிருஷ்ணன்
அதிமுக - பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளன என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
3. நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி நிச்சயம் தோற்கடிக்கப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
4. ‘‘நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்’’ தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
5. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார்: சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா பேட்டி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...