மாநில செய்திகள்

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு இன்னும் ஒரு வாரத்திற்குள் டெண்டர் இறுதி செய்யப்படும் : முதலமைச்சர் பழனிசாமி + "||" + For the Attachine Avinashi project Within a week Tender will be final Chief Minister Palanisamy

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு இன்னும் ஒரு வாரத்திற்குள் டெண்டர் இறுதி செய்யப்படும் : முதலமைச்சர் பழனிசாமி

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு இன்னும் ஒரு வாரத்திற்குள் டெண்டர் இறுதி செய்யப்படும் : முதலமைச்சர் பழனிசாமி
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு இன்னும் ஒரு வாரத்திற்குள் டெண்டர் இறுதி செய்யப்படும் என சட்டசபையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalaniswami
சென்னை,

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 30 தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ. நந்தகுமார், தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 

இதற்கு பதில் அளித்த முதல் அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி,

"தமிழகத்தின் முன் அனுமதி இல்லாமல் எந்த அணையையும் ஆந்திரா கட்ட முடியாது. இந்த விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை சட்டரீதியாக நிலைநாட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விதியைமீறி ஆந்திர அரசு கட்டும் அணையை தடுக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மத்திய அரசுக்கும், ஆந்திர அரசுக்கும் பல கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. 

2011-ல் தயாரிக்கப்பட்ட திட்டம் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளளது. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு இன்னும் ஒரு வாரத்திற்குள் டெண்டர் இறுதி செய்யப்படும் . அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு இந்த மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும்" என  கூறினார்.