மாநில செய்திகள்

நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார் + "||" + In Parliament, criticizing the BJP government thambi durai opinion is wrong Minister Jayakumar

நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார்

நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார்
நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல என சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை

மக்களவையில் தம்பிதுரை எம்.பி. நேற்று பேசும் போது,   மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார். ஜிஎஸ்டி, மத்திய பட்ஜெட் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து கடுமையாக விமர்சித்தார். 

இடைக்கால பட்ஜெட் மத்திய, மாநில அரசுகளை பாதிக்கும் வகையில் உள்ளது. தேர்தலை மனதில் வைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தேர்தல் அறிக்கை போன்று உள்ளது. மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும், பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமுமில்லை என கூறினார். 

தம்பிதுரை எம்.பி.யின் பேச்சுக்கு பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர்.

இந்த நிலையில் இன்று தமிழக சட்டசபையில்  பாராளுமன்றத்தில் தம்பிதுரை எம்.பி. பேசியது தனிப்பட்ட கருத்தா? அரசின் கருத்தா? என பொன்முடி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், "நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல.  எந்த திட்டமாக இருந்தாலும் மாநிலங்கள் பாதிக்கப்படும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மாநில அரசின் கடமை, இதுவே ஜெயலலிதாவின் கொள்கை . மத்திய அரசு நிதியை தாமதமாக வழங்குவது குறித்து தம்பிதுரை பேசியுள்ளார், அதில் என்ன தவறு இருக்கிறது?"  என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தின் ரூ.5 ஆயிரம் கோடி நிதியை கேட்டு ஜிஎஸ்டி கூட்டத்தில் அழுத்தம் கொடுக்கப்படும்- ஜெயக்குமார்
தமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.5 ஆயிரம் கோடி நிதியை கேட்டு ஜிஎஸ்டி கூட்டத்தில் அழுத்தம் கொடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
2. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா? ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கண்டனம்
திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா? என்று மு.க.ஸ்டாலினுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3. மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைவது உறுதி இறுதிக்கட்ட பிரசாரத்தில் தம்பிதுரை பேச்சு
மத்தியில், பா.ஜ.க. ஆட்சி அமைவது உறுதி என்று இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது தம்பிதுரை கூறினார்.
4. தமிழக உரிமையை மீட்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை பேச்சு
தமிழக உரிமையை மீட்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை கூறினார்.
5. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முரண்பாடானது தம்பிதுரை பேட்டி
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முரண்பாடாக உள்ளது என தம்பிதுரை கூறினார்.