மாநில செய்திகள்

தமிழர்களின் நாகரீகம்,பண்பாட்டை அறிய முயல்வதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது இல்லை - நீதிபதிகள் வேதனை + "||" + Tamil civilization,Trying to learn culture The Central Government is delaying the delay Not relevant The judges are suffer

தமிழர்களின் நாகரீகம்,பண்பாட்டை அறிய முயல்வதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது இல்லை - நீதிபதிகள் வேதனை

தமிழர்களின் நாகரீகம்,பண்பாட்டை அறிய முயல்வதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது இல்லை - நீதிபதிகள் வேதனை
தமிழர்களின் நாகரீகம்,பண்பாட்டை அறிய முயல்வதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது, ஏற்புடையது அல்ல என மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
மதுரை,

காமராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பரம்பு பகுதியில் 13 ஆயிரம் ஆண்டு பழமையான தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும், மேலும் பல வரலாற்று சான்றுகள் புதைந்துள்ளதால் இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழர்களின் நாகரீகம்,பண்பாட்டை அறிய முயல்வதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது, ஏற்புடையது அல்ல.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நடத்தியதின் முடிவு என்ன என்றும், அதன் அறிக்கையை ஏன் இதுவரை சமர்பிக்கவில்லை எனவும் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். 

தூத்துக்குடி சிவகளையில் அகழ்வாராய்ச்சி நடத்தும் கோரிக்கை குறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை இயக்குநர்கள் பதிலளிக்க வேண்டும். 

தவறும் பட்சத்தில் தொடர்புடைய அதிகாரிகள், நேரில் ஆஜராக நேரிடும் என்று கூறி வழக்கை வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.