மாநில செய்திகள்

கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம் + "||" + Clean bowled, No-Ball, Sixes Like cricket commentary Discussion on the TN assembly

கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்

கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்
கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் இன்று சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது.
சென்னை,

தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது.  நேற்று முதல் நாள் விவாதத்தில் பேசிய செம்மலை எம்.எல்.ஏ. பல்வேறு திட்டங்கள் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி "சிக்ஸர்" அடித்துக் கொண்டிருக்கிறார் என கூறியது குறிப்பிடத்தக்கது.

இன்று 2 வது நாள் விவாதம் நடைபெற்றது. திமுக எம்எல்ஏ பொன்முடி, ஸ்டாலின் வீசும் பந்தில் அதிமுக ஆட்சி "கிளீன் போல்டு" ஆகும் என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார்,  ஸ்டாலின் வீசும் பந்து "நோ-பால்" ஆகும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கமணி, "மைதானத்திற்குள் வந்து வீசப்படும் பந்துதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மைதானத்திற்கு உள்ளேயே வராமல் ஸ்டாலின் பந்தை வீசிக்கொண்டிருக்கிறார்" என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இறுதி துணை நிதிநிலை அறிக்கை : ரூ.17,714 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
இறுதி துணை நிதிநிலை அறிக்கைக்காக 17 ஆயிரத்து 714 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2. பொங்கல் பரிசு கணக்கில் தவறு : சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
பொங்கல் பரிசு வழங்கியது தொடர்பாக துணை முதல்வர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால், திமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
3. தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் - சட்ட மசோதா தாக்கல்
தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
4. சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வேலுமணி
சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.158 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மு.க. ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் வேலுமணி பதில் அளித்தார்.
5. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை; மத்திய அரசிடம் அசைந்து கொடுத்ததில்லை-ஓ.பன்னீர் செல்வம்
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை, இருந்தாலும் மத்திய அரசிடம் நாங்கள் அசைந்து கொடுத்ததில்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.