இந்த 5 ஆண்டுகளுக்கு எனது ஆதரவு அ.தி.மு.க.வுக்குத்தான் - சட்டசபையில் கருணாஸ் எம்.எல்.ஏ. பேச்சு + "||" + This is 5 years My support is to the AIADMK
Karunas MLA talks on assembly
இந்த 5 ஆண்டுகளுக்கு எனது ஆதரவு அ.தி.மு.க.வுக்குத்தான் - சட்டசபையில் கருணாஸ் எம்.எல்.ஏ. பேச்சு
இன்று சட்டசபையில் கருணாஸ் எம்.எல்.ஏ. பேசும் போது இந்த 5 ஆண்டுகளுக்கு எனது ஆதரவு அ.தி.மு.க.வுக்குத்தான் என கூறினார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் பெயரில் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்ததற்கு நன்றி. கல்லூரி அமையவுள்ளது கருணாஸ் தொகுதியில் இல்லை. எனது தொகுதி தான் என அமைச்சர் மணிகண்டன் குறுக்கிட்டு பேசினார்.
தொடர்ந்து பேசிய கருணாஸ் எனது தொகுதியில் அரசு எதையும் செய்யவில்லை என ஒப்புகொண்ட அமைச்சருக்கு நன்றி. எனது ஆதரவு எப்போதும் அ.தி.மு.க அரசுக்கே. 5 ஆண்டுகளையும் அ.தி.மு.க அரசு ஆட்சி செய்ய வேண்டுமென்பதே எனது விருப்பம். இனி தேர்தலில் போட்டியிடுவேனா மாட்டேனா என்பது எனக்கு தெரியாது. நான் புலி என்றாலும் பாசப்புலி என கூறினார்.
இந்த பாசப்புலியை கூண்டுக்குள் அடைத்து வைத்தால் பாசமாக இருக்குமா என ஓ. பன்னீர்செல்வம் கேட்டார்.